»   »  மறுபடியும் பலே பாண்டியா

மறுபடியும் பலே பாண்டியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்ப காலத்திற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நவரச நடிப்பில் உருவான பலே பாண்டியா படத்தின் டைட்டிலில் ஷக்தி சிதம்பரம் இயக்க புதிய படம் தமிழில் உருவாகிறது.

அந்தக் காலத்தில் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் படங்களை ரீமேக் செய்யும் புதுப் பழக்கம் தமிழில் அதிகரித்து வருகிறது. முதல் படமாக நான் அவனில்லை வந்தது. இப்படம் ஹிட் ஆனதால், பழைய தமிழ்ப் படங்களை ரீமேக் செய்யும் ஆர்வம் கோலிவுட்டில் அதிகரித்து விட்டது.

அடுத்து பில்லா வரப் போகிறது. தொடர்ந்து முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இந்த நிலையில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பலே பாண்டியா என்ற படம் உருவாகிறது.

இப்படத்தின் பெயர் மட்டுமே சிவாஜி படத்தின் டைட்டிலாம். ஆனால் கதை முற்றிலும் வித்தியாசமான கதையாம். சுந்தர்.சி. தான் இப்படத்தின் நாயகனாக நடிக்கவுள்ளார்.

தற்போது வீராப்பு,பெருமாள் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வரும் சுந்தர்.சி, அவற்றை முடித்து விட்டு பலே பாண்டியாவுக்கு வருகிறாராம்.

நடிகர் திலகத்தின் படத்திற்கும், இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காதாம். பெயரை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். மற்றபடி கதை முற்றிலும் வேறாகும் என்றார் ஷக்தி சிதம்பரம்.

அடுத்து மாட்டுக்கார வேலன் டைட்டில் சுடப்படுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil