»   »  சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்- ஆமிர்கான்

சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்- ஆமிர்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோனின் கடந்த காலத்தைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருடன் சேர்ந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கான் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது சன்னி லியோனை பேட்டியெடுத்த நிருபர் சற்று முகம் சுளிக்கும் வகையிலான கேள்விகளையும் கேட்டு வைத்தார்.

இதற்கு சன்னி லியோன் அமைதியாகவும், பொறுமையாகவும் பதிலளித்தார். அதில் நடிகர் ஆமிர்கான் உங்களுடன் பணியாற்ற விரும்புவாரா? என்று ஒரு கேள்வி எழுந்தது.

இதற்கு சன்னி லியோன் ஆமிர்கான் என்னுடன் நடிக்க விரும்பவில்லை என்றாலும் நான் அவரது ரசிகைதான். தொடர்ந்து அவருடைய படங்களை பார்த்து அவருக்கு ஆதரவளிப்பேன் என்று கூறியிருந்தார்.

Sunny i will Happy to Work with you Says Aamir Khan

தற்போது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் ஆமிர்கான் "சன்னி உன்னுடைய கடந்த காலத்தைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

உன்னுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று பதிலளித்து இருக்கிறார். இதனால் நெகிழ்ந்து போன சன்னி லியோன் நான் உங்களை மதிக்கிறேன் உங்களின் இந்த பதில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் நடிகர் ஆமிர்கான், அர்ஜுன் கபூர் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், சுருதிஹாசன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் தங்களது ஆதரவை சன்னி லியோனுக்கு அளித்து வருகின்றனர்.

English summary
Bollywood Super Star Aamir Khan lend their support to Sunny Leone. He Wrote on Twitter "Sunny,I wil b happy 2 wrk wid u.I hav absolutely no problems wid ur "past".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil