»   »  'கான்' பர்ஸ்ட் லுக்குக்கு செம வரவேற்பு.. 'பாப்கார்ன்' போல சந்தோஷத்தில் பொறியும் சிம்பு!

'கான்' பர்ஸ்ட் லுக்குக்கு செம வரவேற்பு.. 'பாப்கார்ன்' போல சந்தோஷத்தில் பொறியும் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கான் பட பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால் சூப்பர் ஹேப்பியாக இருக்கிறாராம் சிம்பு. தனது ரசிகர்களுக்கு அவர் ஸ்பெஷல் தேங்க்ஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக சிம்புவின் படம் எதுவும் ரிலீசாகவில்லை. வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு என தொடர்ந்து அவரது படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன.


இந்நிலையில், சமீபத்தில் கௌதம்மேனனுடன் ஒரு படம், செல்வராகவனுடன் ஒரு படம் என புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார் சிம்பு.


ஜெட் வேகம்...

ஜெட் வேகம்...

வழக்கமாக சிம்புவும் சரி, செல்வராகவனும் சரி வேலையை மெதுவாக இழுத்தடித்து படப்பிடிப்பை தாமதமாக்குவார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. ஆனால், அதனைப் பொய்யாக்கி இப்புதிய படவேலைகளில் இருவரும் ஜெட் வேகத்தில் செயல்பட்டனர்.


கான்...

கான்...

இப்படத்திற்கு கான் எனப் பெயரிடப் பட்டது. கான் என்றால் காடு என்று பொருள். இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக மெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரஸா மற்றும் டாப்ஸி நடிக்கின்றனர்.


பர்ஸ்ட் லுக்...

பர்ஸ்ட் லுக்...

கான் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சிம்பு இப்படத்தில் முருக பக்தராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உண்மை என மெய்ப்பிப்பது போல, நெற்றியில் விபூதி பட்டை போட்டு, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை அணிந்து கைகளைக் கூப்பியவாறு சிம்பு நிற்பது போன்ற போஸ்டர் வெளியானது.


வித்தியாசமான போஸ்டர்...

வித்தியாசமான போஸ்டர்...

வெளியான சிறிது நேரத்திலேயே கான் பர்ஸ்ட் லுக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக உள்ளது என்று பலரும் இதற்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சிம்பு ஹேப்பி...

சிம்பு ஹேப்பி...

தொடர்ந்து தனது கான் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் தரும் ஆதரவால் சிம்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகிழ்ச்சியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.


ஸ்பெஷல் தேங்க்ஸ்...

ஸ்பெஷல் தேங்க்ஸ்...

அதில் அவர் கூறுகையில், ‘கான் பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த ஆதரவால் சூப்பர் ஹேப்பியாக இருக்கிறேன். ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் எனது ஸ்பெஷல் தேங்க்ஸ். நீங்க இல்லாம நான் இல்ல. நான் ஆசிர்வதிக்கப் பட்டவன்' என சிம்பு தெரிவித்துள்ளார்.


English summary
'Super happy with the response #KAANFirstLook ...Special thanks to fans for the love and support .Neenga illama naan illa #blessed’ actor Simbu tweeted.
Please Wait while comments are loading...