குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்... டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடி உள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. ஒரு அரிய குடும்பப் புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த இனிமையானத்தில் ரசிகர்கள் அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த மகிழ்ச்சியான தீப திருநாளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினார்கள். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறினர். தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்றும் தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம் இன்று நீண்டுள்ளது.

Rajinikanth Diwali
Photo Credit:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தீபாவளியையொட்டி, நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து சொல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தீபாவளிக்கு ரஜினியை சந்தித்த ரசிகர்கள், கோஷங்களை எழுப்பி அவருக்கு தீபாவளி வாழ்த்து கூறினர்

அரிய புகைப்படம்: இந்நிலையில், ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் தீபாவளி கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில், ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், விசாகன், மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இந்த குடும்பப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினிகாந்தின் குடும்பப் படங்கள் பொதுவாக அதிகம் வெளியாவது இல்லை. இந்த தீபாவளிப் புகைப்படம், பல வருடங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ஒரு அரிய தருணம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் இணையத்தில் தீ போல பரவி வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் குடும்பம் இப்படி ஒன்றாக இணைந்துள்ளது என்று சமூக வலைத்தளப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X