»   »  தமிழ் சினிமாவின் 'நிரந்தர முதல்வரின்' டாப் 5 கலெக்‌ஷன்ஸ்!

தமிழ் சினிமாவின் 'நிரந்தர முதல்வரின்' டாப் 5 கலெக்‌ஷன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவை ஒரு அரசியலாக பாவித்தால் அதில் முதல்வர் நாற்காலி என்றைக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான். லிங்காவுக்கு பிறகு தன்னை பற்றி எழுந்த எல்லா கேள்விகளுக்கும் கபாலியின் உலக சாதனை மூலம் பதிலளித்து விட்டார் சூப்பர் ஸ்டார். ரஜினி நடிக்க வந்து கடந்த 18 ஆம் தேதியோடு 41 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 41 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக விளங்கும் ரஜினியின் கேரியரில் இந்திய அளவில் வசூல் சாதனை செய்த படங்களை பட்டியலிட்டுள்ளது பிரபல இணையதளம் ஒன்று.

6. பாட்ஷா

6. பாட்ஷா

1995 ல் வெளியான இந்த படம் தான் இன்று வரை தமிழில் கமர்ஷியல் கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி. அப்பாவி ஆட்டோ மாணிக்கமாகவும், ஆக்‌ஷன் அவதார் பாட்ஷாவாகவும் இருவேறு வித்தியாச அவதாரம் எடுத்த இந்த படத்தின் திரைக்கதையும் பிரமாதமாக இருக்கும். ஒரு தடவை சொன்னா... பன்ச் பல ஆண்டுகள்


மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த்து. தேவா இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த படம் தான் தமிழின் முதல் 25 கோடி வசூலைத் தொட்ட படம். 1995 கால கட்டத்தில் இது ஐநூறு கோடிகளுக்கு சமம்.5. படையப்பா

5. படையப்பா

தமிழ் சினிமாக்களிலேயே முதன்முறையாக இருநூறு தியேட்டர்களுக்கும் அதிகமாக ரிலீஸான படம் படையப்பா. அதோடு ஒப்பனிங் என்ற சொல்லுக்கே வித்திட்டது படையப்பாதான். அத்தனை எதிர்பார்ப்புகள் இந்தப் படத்துக்கு. சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே ரஜினிக்கு இணையான கதாபாத்திரங்கள்


கொடுக்கப்பட்டன. 38 கோடிகளைத் தொட்ட பாக்ஸ் ஆபீஸ் வசூலும் அதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை. எஃப்.எம்.எஸ் எனப்படும் வெளிநாட்டு வியாபாரமும், வெளிநாட்டு வசூலையும் படையப்பாதான் தொடங்கி வைத்தது. வெளிநாட்டு வசூல் மட்டும் 6 கோடியைத் தொட்டது. தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற பெருமை ரஜினிக்குத்தான் சேரும்.4. சந்திரமுகி

4. சந்திரமுகி

2004 ல் வெளியான சந்திரமுகி 62 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்தது. 1944ல் வெளியாகி 784 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் படத்தின் சாதனையை முந்தி 890 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது சந்திரமுகி. தமிழில் பேய் பட ட்ரெண்டை தொடங்கி வைத்த சந்திரமுகி மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய மணிச்சித்திர தாழ் படத்தின் ரீமேக். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் ரூ 65 கோடி. இதுவும் அதுவரை எந்த தமிழ் படமும் வசூலிக்காத ஒரு தொகை.


3. சிவாஜி த பாஸ்

3. சிவாஜி த பாஸ்

ரொம்ப நாள் கனவான ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் என்றதும் எகிறிய எதிர்பார்ப்புகளை ஏமாற்றவில்லை சிவாஜி. ஏவிஎம் தயாரிப்பில் வெளியான சிவாஜி வசூல் செய்த மொத்த தொகை 135 கோடிகள். இந்திய சினிமா வரலாற்றில் 2007 லிலேயே நூறு கோடி பாக்ஸ் ஆபிஸை கடந்த படம் சிவாஜி தான். பின்னர் 3டியிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.


2. எந்திரன்

2. எந்திரன்

சூப்பர்ஸ்டார் கேரியரில் ஒரு மைல்கல் என்றால் அது எந்திரன்தான். ஷங்கர், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பாவான்கள் இணைந்த இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 135 கோடி. அன்றைக்கு இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் இந்தப் படத்துக்குத்தான். அதுவும் ஒரு பிராந்திய மொழிப் படத்துக்கு.


வசீகரனாகவும் சிட்டியாகவும் வந்து கலக்கியிருந்தார் சூப்பர் ஸ்டார். கடந்த ஆண்டு பாகுபலி ரிலீஸ் ஆகும்வரை எந்திரனின் வசூலை எந்த தென்னிந்திய படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.


அன்றைக்கே 300 கோடிகளைத் தாண்டியது பாக்ஸ் ஆபிஸ் வசூல்.1. கபாலி

1. கபாலி

சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் ரிலீஸ் கபாலி பல உலக சாதனைகளை படைத்தது. முதல் நாள் வசூலான 107 கோடியை எந்த இந்தியப் படமும் தொட்டதில்லை. இதுவரை மட்டுமே நானூறு கோடிகளை தாண்டிவிட்டது வசூல். அனைத்து வகையிலும் ரூ 700 கோடியைத் தாண்டிவிட்டதாகக் கூறுகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்களும் மீடியாக்காரர்களும். வெளியாகி 40 நாட்களுக்குப் பிறகும் கூட அனைத்து ஏரியாக்களிலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கபாலியின் ரிப்பீட் ஆடியன்ஸுக்கு திரையரங்குகளே சாட்சி.


English summary
Here is Superstar Rajinikanth's all time block busters of his carrier including the latest one Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil