»   »  சரத்குமாரின் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பேச்சு... அஜீத் - விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதல்

சரத்குமாரின் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பேச்சு... அஜீத் - விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்த சூப்பர் ஸ்டார்... இப்படி ஒரு பட்டத்தை உருவாக்கியதிலிருந்து பெரும் சர்ச்சையும் சண்டையுமாக இருக்கிறது தமிழ் சினிமாவிலும் இணைய உலகிலும்.

தமிழ் சினிமாவில் அவரவர்க்கு ஒரு பட்டம். அந்த வகையில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம். பொதுவாக ஒருவரின் பட்டப் பெயரை இன்னொருவர் சூட்டிக் கொள்ள முயன்றதில்லை. மக்கள் திலகம் என்றால் எம்ஜிஆர்தான். நடிகர் திலகம் என்றால் சிவாஜிதான். அது போல ரஜினிக்கு சூப்பர் ஸ்டார்.

Superstar title: Ajith - Vijay fans clash in Social Network sites

ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர் சினிமாவின் முதலிடத்தில் உள்ள நடிகரைத்தான் குறிக்கும் எனும் அளவுக்கு கடந்த 35 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார் ரஜினிகாந்த்.

எனவே சூப்பர் ஸ்டார் பட்டம் இருந்தால்தான் முதலிடத்தில் உள்ளதாக அர்த்தம் என்று நினைத்துக் கொண்ட இன்றைய நடிகர்கள் பலரும் அந்தப் படத்தை தங்கள் பெயருக்கு முன் சூட்டிக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

கொஞ்ச நாள் அஜீத் இதற்கான முயற்சியில் இறங்கினார். பின்னர் அவரே பக்குவப்பட்ட பிறகு, பட்டங்களே எனக்கு வேண்டாம். நடிகனாக நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று விலகிக் கொண்டார்.

இந்த சூப்பர் ஸ்டார் படத்தின் மீதான தன் ஆசை குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்லாத விஜய், அப்படி பட்டம் கொடுத்த பத்திரிகைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைத் தர விழா எடுக்கும் ஏற்பாடுகளையும் அமைதியாக ஏற்றார். ஆனால் தமிழக அரசு அப்படி ஒரு விழா நடப்பதைத் தடுத்துவிட்டது.

அதன் பிறகு இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை அமுங்கிப் போனது. ஆனால் அதை மீண்டும் கிளறியுள்ளார் சரத்குமார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என எனக்கு முன்பே தெரியும்.. ஆனால் விஜய்யை ரஜினியோடு ஒப்பிடுவதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்று அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச, அதை விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். உடனே அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அஜீத் ரசிகர்கள், மிகக் கடுமையாக சமூக வலைத் தளங்களில் எழுத ஆரம்பித்துள்ளனர்.

English summary
After the controversial speech of Sarathkumar on Superstar title, the fans of Ajith and Vijay have clashed in social network.
Please Wait while comments are loading...