ட்விட்டரில் சேர்ந்த நாளே சாதனை: இந்தியாவில் ஃபர்ஸ்ட், உலக அளவில் ரஜினிக்கு 6வது இடம்

By Siva

சென்னை: ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ரஜினிகாந்த் சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 5ம் தேதி ட்விட்டரில் கணக்கு துவங்கினார். அவர் கணக்கு துவங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தனர்.

அவர் ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

ரஜினி

ரஜினி

ரஜினி ட்விட்டரில் கணக்கு துவங்கி எதுவும் ட்வீட் செய்யும் முன்பே அவரை 10 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் 46 ஆயிரம் ஃபாலோயர்களை பெற்றார். இது தான் இந்திய அளவில் ஒருவர் ட்விட்டரில் சேர்ந்த நாளே அதிகம் பெற்ற ஃபாலோயர்களாக இருந்தது.

இந்தியாவில்

இந்தியாவில்

இந்தியாவில் ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளிலேயே அதிக ஃபாலோயர்களை பெற்ற முதல் நபர் என்ற பெறுமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

உலக அளவில்

உலக அளவில்

உலக அளவில் ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் ரஜினிகாந்துக்கு 6வது இடம் தான் கிடைத்துள்ளது.

ராபர்ட் டவ்னி ஜூனியர்

ராபர்ட் டவ்னி ஜூனியர்

ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளே ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியருக்கு 10 லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதன் மூலம் உலக அளவில் ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளே அதிக ஃபாலோயர்களை பெற்றவர் என்று பெறுமையை ராபர்ட் டவ்னி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் உள்ளார்.

போப்

போப்

ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளே அதிக ஃபாலோயர்களை பெற்றவர்கள் பட்டியலில் போப் பிரான்சிஸுக்கு 3வது இடமும், பில் கேட்ஸுக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X