»   »  நடிகைகள் திறமையை காட்டுகிறார்கள் உடம்பை அல்ல: பொங்கிய விஷால்

நடிகைகள் திறமையை காட்டுகிறார்கள் உடம்பை அல்ல: பொங்கிய விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் திறமையை காட்டுகிறார்களே தவிர உடம்பை அல்ல என்று சுராஜ் சர்ச்சை குறித்து நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தனது படங்களில் நடிகைகளுக்கு அரைகுறை ஆடை அளிப்பதாக இயக்குனர் சுராஜ் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகைகளை தரக்குறைவாக பேசிய சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமன்னா தெரிவித்தார்.

Suraj's statement angers Vishal

நடிகைகள் என்றால் கேமரா முன்பு ஆடையை அவிழ்த்துப் போடுபவர்கள் அல்ல என நயன்தாரா கொந்தளித்தார். இதையடுத்து சுராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்த விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இயக்குனர் சுராஜ் தேவையில்லாமல் பேசியுள்ளார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்று கூறவில்லை, நடிகராக கூறுகிறேன். நடிகைகள் தங்களின் திறமையை காட்டுகிறார்களே தவிர உடம்பை அல்ல. சுராஜ் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சாரி தமன்னா. தேவையில்லாதது.

English summary
Actor Vishal tweeted that, 'Totally unnecessary statement by Dir Suraaj.not jus sayin dis as gen secy of da artist association but as an actor.actresses showcase their talent and not their bodies.n glad that Suraj has apologised.tamannaahspeaks sorry for Wat u bin thru Coz of this.unwanted.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil