சிவகார்த்திகேயன் பட டைரக்டருடன் இணைகிறாரா சூர்யா... அதுவும் இப்படி ஒரு கதையா?
சென்னை : நடிகர் சூர்யா வரிசையாக பல படங்களில் கமிட்டாக பிஸியாக நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் பட டைரக்டர் இயக்க உள்ள புதிய படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் கதை பற்றிய தகவலும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர்.
சூர்யா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். தற்போது டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தை ஜுன் - ஜுலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சூர்யா கூறி உள்ளதால், படத்தின் வேலைகள் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தள்ளி போகிறதா வாடிவாசல்
சூர்யா 41 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சூரி, விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் இயக்கி வந்த விடுதலை படத்தின் வேலைகள் இன்னும் முடியவில்லையாம். இதனால் வாடிவாசல் படத்தை துவங்க காலம் தாமதம் ஆகும் என்பதால், அதற்குள் ஜெய்பீஸ் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வரிசையாக எத்தனை படம்
இதோடு சுதா கொங்கரா இயக்கும் புதிய படம் ஒன்றிலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்தை முடித்த பிறகு சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போவதாகவும், இதை முடித்த பிறகே சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சிறுத்தை சிவா படத்தில் சூர்யா நடிக்கவில்லையாம்.

டைரக்டரை மாற்றிய சூர்யா
லேட்டஸ்ட் தகவலின் படி, சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் சையின்ஸ் ஃபிக்சர் படத்தில் தான் சூர்யா நடிக்க போகிறாராம். டைரக்டர் சிறுத்தை சிவாவிற்கு கொடுத்திருந்த தேதிகளை தான் மாற்றி, டைரக்டர் ரவிக்குமாருக்கு கொடுத்திருக்கிறாராம் சூர்யா. ரவிக்குமாரின் அயலான் படம் டிசம்பர் மாதம் அல்லது 2023 ம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

எப்போ ஆரம்பிக்க போறிங்க
இதனால் அயலான் படம் ரிலீசான பிறகு, சூர்யாவும் வாடிவாசல் படத்தை முடித்த பிறகு சூர்யா -ரவிக்குமார் இணையும் படம் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போகிறாராம். மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

24 பார்ட் 2 எடுக்க போகிறாரா
சூர்யா ஏற்கனவே நடித்த டைம் மிஷினை மையமாகக் கொண்ட 24 படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என பலரும் கேட்டு வருகிறார்கள். இதனால் 24 படத்தின் இரண்டாம் பாகத்தை தான் ரவிக்குமார் இயக்க போவதாக மற்றொரு தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











