»   »  விளக்குமாறும், கையுமாக ஆவடியை சுத்தம் செய்ய கிளம்பிய சூர்யா

விளக்குமாறும், கையுமாக ஆவடியை சுத்தம் செய்ய கிளம்பிய சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ். 3 படப்பிடிப்பில் இருந்து கிடைத்த பிரேக்கில் நடிகர் சூர்யா சென்னை ஆவடியில் குப்பையை அள்ளி பொது இடங்களை சுத்தம் செய்துள்ளார்.

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3.ல் நடித்துக் கொண்டிருக்கிறார். எஸ்.3. தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Suriya cleans up Avadi during S3 break

கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சூர்யாவுக்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் ஹாயாக வீட்டில் அமர்ந்து பீட்சா, பர்கர் சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்க்கவில்லை. மாறாக விளக்குமாறும், கையுமாக சென்னை ஆவடி பகுதியில் குப்பையை அள்ளி சுத்தம் செய்துள்ளார்.

தான் சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஆவடி பகுதியை சுத்தமாக்கி பசுமையானதாக ஆக்க அவர் துவங்கிய பசுமை ஆவடி திட்டத்தின் கீழ் அவர் சுத்தம் செய்துள்ளார்.

மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து பல்வேறு பகுதிகளை தேர்வு செய்து சுத்தம் செய்து வருகிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் சூர்யா.

English summary
Actor Suriya has cleaned few places in Avadi and planted saplings there as part of his initiative Pasumai Avadi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil