»   »  இனி சூர்யா ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் கிடையாது

இனி சூர்யா ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் கிடையாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக சூர்யா உடல் எடையை 10 கிலோ குறைக்கிறாராம்.

ஹரி இயக்கத்தில் எஸ். 3 படத்தில் நடித்த சூர்யா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வருகிறாராம்.

Suriya to lose 10 kilos for Vignesh Shivan

சூர்யா தனது எடையை 10 கிலோ குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் விக்கி. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் சூர்யா வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளாராம்.

ஜிம்முக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையை குறைக்கிறாராம். எஸ்.3 படத்தில் போலீஸ் அதிகாரியாக கெத்தாக இருக்க ஏற்றிய எடையை தற்போது குறைத்துக் கொண்டிருக்கிறார்.

வரும் 19ம் தேதி முதல் தானா சேர்ந்த கூட்டத்தின் படப்பிடிப்பை சென்னையில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suriya is on a healthy diet to lose 10 kilos for his upcoming movie Thaanaa Serndha Koottam to be directed by Vignesh Shivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil