»   »  முதல்ல சம்பளத்தக் குடுத்துட்டு அப்புறம் பேசலாமே: தயாரிப்பாளர் மீது சூர்யா குழு பாய்ச்சல்

முதல்ல சம்பளத்தக் குடுத்துட்டு அப்புறம் பேசலாமே: தயாரிப்பாளர் மீது சூர்யா குழு பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
10 நாடுகளுக்குப் பறக்கும் சூர்யா!- வீடியோ

சென்னை: தயாரிப்பாளர் சசிகாந்த் மீது சூர்யாவின் குழு கோபத்தில் உள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதை பாராட்டும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா காரை பரிசளித்தார் சூர்யா. ஆனால் படம் தோல்வி அடைந்ததை மறைக்கவே சூர்யா இப்படி பரிசளித்ததாக விநியோகஸ்தர்கள் கோபம் அடைந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சசிகாந்தும் சூர்யா கார் பரிசளித்தது பற்றி பேசியுள்ளார்.

வெற்றி

வெற்றி

ஒரு படம் வெற்றி பெற்றால் வீட்டில் அமைதியாக அதை கொண்டாட வேண்டும். ஒரு படத்தை எடுக்க 2, 3 ஆண்டுகள் போராடி அது வெற்றி பெற்றால் கொண்டாட வேண்டியது தான். ஆனால் அதை விளம்பரப்படுத்துவது தவறு என்கிறார் சசிகாந்த்.

கார்

கார்

ஒரு முன்னணி நடிகர் தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளார். இது வழக்கமாகிவிடுமே. நான் 12 படங்கள் தயாரித்துள்ளேன். ஒவ்வொரு படமும் ஒரு வகையில் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார் சசிகாந்த்.

அழுத்தம்

அழுத்தம்

படங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற பிரஷர் உள்ளது என்று தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார். சசிகாந்தின் பேச்சு சூர்யாவின் குழுவினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

விமர்சனம்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்டின் இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தன் பட நடிகர், இயக்குனருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத தயாரிப்பாளர் பரிசுகளை பற்றி பேசுகிறார். முதல்ல சம்பளத்தக் குடுத்துட்டு அப்புறம் பேசலாமே!! என தெரிவித்துள்ளார்.

Read more about: suriya tsk சூர்யா
English summary
Suriya's 2D entertainment team is unhappy with producer Sashikanth's speech about the TSK actor giving a car to director Vignesh Shivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X