twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய சூர்யா படம்....கடுப்பாகி அவர் செய்த காரியம் தெரியுமா?

    |

    சென்னை : தென்னிந்திய சினிமாவில் பிஸியான முன்னணி நடிகராக மட்டுமின்றி, வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் இருப்பவர்களில் சூர்யாவும் ஒருவர். ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.

    'நான் விருந்தாளியாவே இருந்துட்டு போறேன்' நடிகர் சங்க தேர்தலில் தோல்வி.. பிரகாஷ் ராஜ் உருக்கம்!'நான் விருந்தாளியாவே இருந்துட்டு போறேன்' நடிகர் சங்க தேர்தலில் தோல்வி.. பிரகாஷ் ராஜ் உருக்கம்!

    அதோடு தனது 2 டி நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி, ஜோதிகா, தான் நடிக்கும் படங்களை மட்டுமல்ல மற்ற நடிகர்கள் லீட் ரோலில் நடிக்கும் படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார். 2 டி தயாரித்துள்ள 4 படங்கள் வரிசையாக 4 மாதங்கள் ரிலீஸ் செய்யப்படும் என சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

    ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

    அதன்படி 2டி நிறுவனம் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் செப்டம்பர் மாதம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட்டது. ரம்யா பாண்டியன், வாணி போஜன் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் நடத்த இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார்.

    வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியன்

    வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியன்

    இந்த படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேக்அப் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த ரம்யா பாண்டியன், துணிச்சலான பத்திரிக்கையாளராக நடித்த வாணி போஜன் ஆகியோரின் நடிப்பை பெரும் வரவேற்பை பெற்றது. எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவிற்கு தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது இந்த படம்.

    கதை திருட்டு சர்ச்சை

    கதை திருட்டு சர்ச்சை

    2015 ம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த Rangaa Patangaa படத்தின் கதையை காப்பி அடித்து தான் அரிசில் மூர்த்தி, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் கதையை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சை எழுந்தது. Rangaa Patangaa படத்தின் கதையில் சிறிய அளவில் மாற்றம் செய்து தான் இந்த படத்தை அவர் இயக்கி உள்ளார். அதில் வரும் ஆண் பத்திரிக்கையாளரின் கேரக்டரை தான் பெண் பத்திரிக்கையாளர் ஆக்கி உள்ளார்.

    கடுப்பான சூர்யா

    கடுப்பான சூர்யா

    இந்த விவகாரம் சூர்யாவிற்கு தெரிய வர, அவரும் விசாரித்து பார்த்ததில் கதை திருடப்பட்டது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. இதனால் கடுப்பாகி, படத்தின் டைரக்டரை கூப்பிட்டு எச்சரித்ததுடன், செம டோஸ் விட்டுள்ளார். அதோடு நிறுத்தாமல், Rangaa Patangaa படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளாராம் சூர்யா.

    முன்னுதாரணமாக மாறிய சூர்யா

    முன்னுதாரணமாக மாறிய சூர்யா

    அவர்களிடம் சமரசம் பேசி, படத்தின் கதை உரிமத்திற்கான உரிய தொகையையும் கொடுப்பதாக பேசி, பிரச்சனையை சத்தமில்லாமல் முடித்துள்ளாராம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே சூர்யா ஒரு முன்னுதாரணமாக நடந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. கதை திருடப்பட்டது தனக்கு தெரிய வந்ததுமே, கதையை உண்மையாக உருவாக்கியவர்களை தானே தொடர்பு கொண்டு, உரிமத்திற்கான தொகையை இழப்பீட்டு தொகையாக கொடுத்துள்ளாராம்.

    கதை திருட்டு புதிதல்ல

    கதை திருட்டு புதிதல்ல

    தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கதை திருட்டு என்பது பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பல முன்னணி ஹரோக்களின் படங்களும் இந்த கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி, கோர்ட் வரை போய், படத்தின் ரிலீசுக்கே சிக்கல் வந்துள்ளது.

    English summary
    Ramae aandalum ravanae aandalum movie story was copied from marathi movie Rangaa Patangaa. after found that suriya contacted that movie director and producers and paid compensation for story rights.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X