சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தபோது சூர்யா செய்த ஒரு காரியம் பற்றி தெரிய வந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன், சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யா விக்கியை பாராட்டி அவருக்கு டொயோட்டா காரை பரிசளித்துள்ளார்.
படம் ஊத்திக் கொண்டபோது சூர்யா தனது இமேஜை காப்பாற்ற இப்படி நாடகமாடுகிறார் என்று வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மகிழ்ச்சி
சூர்யா விக்னேஷ் சிவனின் திறமையை பாராட்டி பரிசு கொடுக்க வினியோகஸ்தர்களோ நஷ்டக் கணக்கை சொல்லி குறை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி இயக்குனர்கள்
தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாக தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவனிடம் அவரின் உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா
உதவி இயக்குனர் தன்னிடம் கூறியதை விக்னேஷ் சிவன் சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். சூர்யாவோ விக்கியின் உதவி இயக்குனர்களுக்கு பெரிய தொகையை கொடுத்து உதவியுள்ளார்.
வாழ்த்து
சூர்யா பெரிய தொகையை கொடுத்து உதவியதும் நீங்க நல்லா இருக்கணும் சார் என்று விக்கியின் உதவி இயக்குனர்கள் அவரை மனதார வாழ்த்தியுள்ளனர்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.