அடிதூள்...சூர்யாவை அடுத்து இயக்க போவது இவரா ?

சென்னை : நடிகர் சூர்யா பிஸியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங் குற்றாலம், தென்காசி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. இது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்திய கதை என கூறப்படுகிறது. நவம்பருக்குள் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

தள்ளிப் போகும் வாடிவாசல்

தள்ளிப் போகும் வாடிவாசல்

எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த பிறகு, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறதாம். இதனால் வாடிவாசல் படத்தின் வேலைகள் 2022 ம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவாவுடன் இணையும் சூர்யா

சிவாவுடன் இணையும் சூர்யா

லேட்டஸ்ட் தகவலின்படி, எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த பிறகு நவம்பரில் நீண்ட காலம் தாமதமாகும் படத்தின் வேலைகளை துவக்க போகிறாராம் சூர்யா. 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஸ்வாசம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே அடுத்ததாக டைரக்டர் சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தை தயாரிக்க போவதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்தது.

4 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

4 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

இதனால் எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, வாடிவாசல் படத்திற்கு பதிலாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் வேலைகளை சூர்யா துவங்க போகிறாராம். பெயரிடப்படாத இந்த படத்திற்காக சிவாவும் கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். இந்த படத்தை மூன்று அல்லது 4 மாதங்களுக்குள் முடித்து விடுவதாக சூர்யாவிடம், சிறுத்தை சிவா வாக்குறுதி அளித்துள்ளாராம்.

பாலா படத்திலும் நடிக்கிறாரா

பாலா படத்திலும் நடிக்கிறாரா

இதனால் சிவா தற்போது இயக்கும் அண்ணாத்த படத்தையும், சூர்யா தற்போது நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தையும் முடித்த பிறகு நீண்ட காலமாக காத்திருக்கும் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க போகிறார்களாம். அதே சமயம், சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பாலா இயக்கும் படத்தில் ஹீரோவாக அதர்வாவிற்கு பதில் சூர்யாவை நடிக்க வைக்க போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஏற்கனவே வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம் என கமிட் ஆகி இருக்கும் சூர்யா, பாலா படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளது. சிறுத்தை சிவா உடனான படத்தின் டைட்டில், படக்குழு பற்றிய அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.

விருப்பம் தெரிவித்த ரஜினி

விருப்பம் தெரிவித்த ரஜினி

சிவா இயக்கி உள்ள அண்ணாத்த தீபாவளிக்கும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் கிறிஸ்துமசிற்கும் ரிலீசாக உள்ளதாம். மற்றொரு தகவலாக, அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிவாவுடன் மற்றொரு படத்தில் இணைய ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சூர்யா, சிவா இருவருமே அடுத்தடுத்த படங்களில் படுபிஸியாக இருப்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X