»   »  மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா

மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: எஸ்3 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற இடத்தில் மாற்றுத்திறனாளியான விஜய் ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் அன்பளிப்பு ஒன்றை அளித்து விஜய்யிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ்3 படத்தின் பெயர் சி3 என்று மாற்றப்பட்டுள்ளது. படம் வரும் 26ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Suriya's sweet gesture

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டு வருகிறார். அவர் தனது படத்தை விளம்பரப்படுத்த கேரளாவுக்கு சென்றார்.

அங்கு மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் வந்து, அண்ணா நான் விஜய் ரசிகர். இந்த அன்பளிப்பை எங்கள் தளபதியிடம் கொடுத்துவிடுகிறீர்களா என்று கேட்க சூர்யாவும் சம்மதித்தார்.

சூர்யா விஜய் ரசிகரிடம் அன்போடு பேசியது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
A differently abled Vijay fan has presented Suriya a gift and asked him to give it to Thalapathy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil