»   »  நல்ல காரியம் செய்த சூர்யா: பிற நடிகர்களும் அவரை பின்பற்றுவார்களா?

நல்ல காரியம் செய்த சூர்யா: பிற நடிகர்களும் அவரை பின்பற்றுவார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா தயாரிப்பாளர்களின் நிதிச் சுமையை குறைக்க புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர்கள் மட்டும் அல்ல அவர்களின் உதவியாளர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர்களின் நிதிச் சுமையை குறைக்க சூர்யா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

Suriya shows a new way in film industry

அதாவது தனது உதவியாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் இருந்து சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்துள்ளார் சூர்யா. சூர்யாவின் முடிவை பார்த்து அவரின் தம்பி கார்த்தியும் தன் உதவியாளர்களுக்கு தானே சம்பளம் கொடுக்க தீர்மானித்துள்ளார்.

கார்த்தி மட்டும் அல்ல அவரின் நெருங்கிய நண்பரான விஷாலும் சூர்யா வழியை பின்பற்றப் போகிறாராம். இதே போன்று பிற நடிகர்களும் சூர்யாவின் வழியை பின்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் சூர்யாவின் வழியை பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Actor cum producer Suriya has decided to pay his assistants wiht his own money. Normally producers pay for actors' assistants. Suriya's gesture is appreciated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X