»   »  கார்த்தியிடம் இருந்து இரண்டடி தள்ளி நிற்கும் சூர்யா: காரணம் காஷ்மோரா

கார்த்தியிடம் இருந்து இரண்டடி தள்ளி நிற்கும் சூர்யா: காரணம் காஷ்மோரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஷ்மோரா படம் பார்த்த சூர்யா தனது தம்பி கார்த்தியின் நடிப்பை பார்த்து மிரண்டு போயுள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த காஷ்மோரா படம் தீபாவளிக்கு முந்தைய நாள் ரிலீஸானது. படம் ரிலீஸான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்த சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பருத்திவீரன்

பருத்திவீரன் படத்தை பார்த்த பிறகு கார்த்தியை கட்டிப்பிடித்தேன். காஷ்மோராவை பார்த்த பிறகு வியப்பில் இரண்டடி தள்ளி நிற்கிறேன். தம்பி டே கலக்கிட்டே!!

காஷ்மோரா

காஷ்மோரா

காஷ்மோராவில் கார்த்தி உன் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவனும் இது பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

கார்த்தி

கார்த்தி

கார்த்தி, நீ என்னை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டாய். கோகுல் மற்றும் குழுவினர் நீங்கள் தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளீர்கள்.

காமெடி

காமெடி

நடிகர்கள் தேர்வு, காமெடி டைமிங், கேமரா மற்றும் புரொடக்ஷன் டிசைன், உடைகள், வசனம் மற்றும் சிஜி ஓர்க் என அனைத்திலும் அசத்திவிட்டனர்.

ராஜ்நாயக்

ராஜ்நாயக்

விஎப்எக்ஸ் ஆதிக்கமுள்ள படத்தில் நடிப்பது கடினம். ஆனால் ராஜ்நாயக் மற்றும் ரத்னமகாதேவி அனைத்து காட்சிகளிலும் கலக்கிவிட்டனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள். முழு நேர என்டர்டெயின்மென்டாக அமைந்துள்ள இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்கவும்.

English summary
Actor Suriya is taken aback by his brother Karthi's amazing performance in Kashmora that hit the screens a day before Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil