»   »  ஹரி படத்தை முடித்ததும் சதுரங்க வேட்டையில் குதிக்கப் போகும் சூர்யா!

ஹரி படத்தை முடித்ததும் சதுரங்க வேட்டையில் குதிக்கப் போகும் சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சதுரங்க வேட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா, மாஸ் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான மாஸ் பட டீஸர் இதுவரை11 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. சமந்தாவுடன் ‘24' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.

இந்த படங்களை அடுத்து இயக்குநர் ஹரி இயக்கும் படம், இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம் என கமிட் ஆகியுள்ள சூர்யா, தற்போது இயக்குநர் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சதுரங்க வேட்டை டீம்

சதுரங்க வேட்டை டீம்

நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் 'சதுரங்க வேட்டை'. மனோபாலா தயாரிக்க இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

வெற்றி பெற்ற ச.வே

வெற்றி பெற்ற ச.வே

'சதுரங்க வேட்டை' படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.

சூர்யா நடிப்பில் ச.வே

சூர்யா நடிப்பில் ச.வே

இயக்குநர் வினோத் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள், அது 'சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த படத்தில்தான் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இயக்குநர் வினோத் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வினோத் அறிவிப்பு

வினோத் அறிவிப்பு

இந்தப்படத்தின் கதையைப் பற்றி நான் வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது. ஆனால் இது என்னுடைய முதல் படத்தை விட வித்தியாசமானதாக இருக்கும் என்று வினோத் கூறியுள்ளார்.

சூர்யாவிற்கான கதை

சூர்யாவிற்கான கதை

சதுரங்க வேட்டை திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. இதனிடையே என்னுடைய இரண்டாவது படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது சூர்யாவிற்காகவே எழுதப்பட்ட கதை என்றும் வினோத் கூறியுள்ளார்.

சூர்யா ஜோடி யார்?

சூர்யா ஜோடி யார்?

இயக்குநர் வினோத்தை சூர்யாவிடம் அழைத்துச் சென்று கதை சொல்ல வைத்திருக்கிறார் லிங்குசாமி. 'சதுரங்க வேட்டை 2' கதையைக் கேட்ட சூர்யா, அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்படம் குறித்தும் சூர்யா உடன் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

English summary
Actor Suriya, who is busy shooting for Tamil action-thriller 24, will next team up with Sathuranga Vettai director Vinoth for a yet-untitled project in the language

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil