வணங்கானும் இல்ல, வாடிவாசலும் இல்ல...சூர்யா அடுத்து நடிக்க போகும் படம் இது தான்

சென்னை : சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் பிஸியாக நடித்து வந்தார். கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட வணங்கான் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டது.

வணங்கான் படத்தின் 70 சதவீதம் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அடுத்த கட்ட மற்றும் இறுதி கட்ட ஷுட்டிங் கோவாவில் நடக்கும் என சொல்லப்பட்டதால் எப்போது துவங்கப்படும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 Suriya to begin shooting for his next with Siva on August 21

இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் டெஸ்ட் ஷுட் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்ட நிலையில், சூர்யாவின் பிறந்தநாளன்று கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வணங்கான் படத்தை முடித்த பிறகு, வாடிவாசல் படத்தின் ஷுட்டிங்கை சூர்யா துவங்குவார் என்றும், வாடிவாசல் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்படும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்க சூர்யா கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, வணங்கான் பட ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கதையில் சில மாற்றங்களை கொண்டு வர டைரக்டர் பாலா முடிவு செய்துள்ளதால், ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஆகஸ்ட் 21 ம் தேதி சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஷுட்டிங்கை துவக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறதே தவிர இதுவரை படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

சூர்யாவின் 39 வது படத்தை தான் சிறுத்தை சிவா இயக்க ஒப்பந்தமானது. நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும இந்த படத்தை முதலில் முடிக்கலாம் என சூர்யா முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் வணங்கான் ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் சூர்யா அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிக்கிறாரா அல்லது சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார் என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X