அடுத்த பயோ பிக்கில் நடிக்க தயாராகும் சூர்யா... இப்போ யாரோட கதை ?

சென்னை : கொரோனா, லாக்டவுன் சமயத்திலேயே சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இறுதிச்சுற்று டைரக்டர் சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் வரவேற்பை பெற்றது.

கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல சர்வதேச விருதுகளை வென்றது. ஓடிடி.,யில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படம் உள்ளிட்ட பல சாதனைகளை சூரரைப் போற்று படம் நிகழ்த்தி விட்டது. இதற்கு பிறகு சூர்யா நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த பயோபிக்

அடுத்த பயோபிக்

இந்நிலையில் அடுத்த பயோபிக் ஒன்றில் நடிக்க சூர்யா கையெழுத்திட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதுவும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் தானாம். இந்த படத்திற்கான டைரக்டர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரை முடிவு செய்யும் பணி நடந்து வருகிறதாம். அனைத்தும் முடிவான பிறகு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

 வரிசைகட்டும் படங்கள்

வரிசைகட்டும் படங்கள்

சூர்யா ஏற்கனவே டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கிடையில் டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படம் அமேசான் பிரைம் வீடியோவில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

2022 ல் தான் வாடிவாசல்

2022 ல் தான் வாடிவாசல்

இதை முடித்து விட்டு இந்த ஆண்டு இறுதியில் டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் சூர்யா. வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், அந்த படத்தின் வேலைகளை 2022 ம் ஆண்டின் மத்தியில் துவக்க திட்டமிட்டுள்ளனர். வாடிவாசல் படத்திற்கு முன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் வேலைகளை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

பாலா இயக்கும் படமும் இருக்கு

பாலா இயக்கும் படமும் இருக்கு

வாடிவாசல் படத்துடன் பாலா இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றம் அல்லது லீட் ரோலில் சூர்யா நடிக்க போகிறாராம். இப்படி வரிசையாக சூர்யா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால் அவர் நடிக்க போவதாக கூறப்படும் பயோபிக் படத்திற்கு இதுவரை தேதி முடிவு செய்யப்படவில்லை. டைரக்டர் உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்பட்ட பிறகு மற்ற விஷயங்களை இறுதி செய்ய போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X