அடுத்த மிரட்டலுக்கு தயாராகும் சூர்யா...விக்ரமில் ரோலக்ஸ்...இதுல என்ன ரோல்?

சென்னை : தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களில் கமிட்டாகி ரொம்ப பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு போட்டியாக நடித்து வருபவர் சூர்யா. விஜய், அஜித் படங்களைத் தாண்டி சூர்யா அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

சூர்யா 41, வாடிவாசல் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படம், அயலான் டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் படம், சுதா கொங்கரா இயக்கும் படம் என சூர்யா நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்ட கொண்டே போனது. இதில் எந்த படத்திற்கு அப்டேட் கேட்பது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயினர்.

ஆனால் யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேங்ஸ்டர் ரோலில் வந்து அனைவரையும் மிரள வைத்தார். வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே இவர் வந்த சீன்கள் தியேட்டர்களை அலற விட்டது. ரசிகர்களும் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

எத்தனை படத்தில் தான் சூர்யா நடிக்கிறார்

எத்தனை படத்தில் தான் சூர்யா நடிக்கிறார்

ஏற்கனவே சூர்யா நடிக்க காத்திருக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் கமலுடன் இணைந்து விக்ரம் 3 படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக கமலே அப்டேட் கொடுத்தார். கைதி 2 படத்தில் வேறு சூர்யா நடிக்கிறார் என கூறப்படுவதால், மொத்தம் எத்தனை படத்தில் தான்ப்பா ஒரு மனுஷன் நடிப்பார் என ரசிகர்களே மிரண்டு போய் கேட்டு வருகின்றனர்.

மீண்டும் கெஸ்ட் ரோலில் சூர்யா

மீண்டும் கெஸ்ட் ரோலில் சூர்யா

இந்த சமயத்தில் மற்றொரு தகவலாக, சூர்யா நடித்து ஓடிடியில் ரிலீசாகி, சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிலும் சூர்யா நடிக்க போகிறாராம். சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதில் சூர்யா நடித்த மாறன் ரோலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்க உள்ளாராம்.

இந்தி மாறனை வாழ்த்திய சூர்யா

இந்தி மாறனை வாழ்த்திய சூர்யா

லேட்டஸ்ட் தகவலின் படி, முதல் கட்ட ஷுட்டிங்கை வட மாநிலங்களில் முடித்து விட்டு, தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிற்காக படக்குழு சென்னை வந்துள்ளதாம். சூரரை போற்று தமிழில் நடித்தவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அந்தந்த கேரக்டர்களில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்களாம். சென்னையில் நடக்கும் சூரரைப் போற்று இந்தி ரீமேக் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று, அக்ஷய் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.

யாருடைய ரோலில் நடிக்கிறார்

யாருடைய ரோலில் நடிக்கிறார்

வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறார் சூர்யா. இந்த சமயத்தில் விக்ரம் படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோல் செய்ய போகிறார்கள். ஆனால் அவர் எந்த ரோலில் நடிக்க போகிறார் என்பது பற்றிய தகவல் தெரியாததால், சூரரைப் போற்று படத்தில் கெஸ்ட் ரோலில் யார் வருகிறார்கள் என ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்து வருகிறார்கள்.

சூரரைப் போற்று இந்தி டைட்டில் இதுவா

சூரரைப் போற்று இந்தி டைட்டில் இதுவா

சூரரைப் போற்று படத்திற்கு இந்தியில் Startup என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ட்விட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகிறது. ஆனால் படத்தின் டைட்டில் பற்றி படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

என்னடா பிதாமகன் படம் எடுத்திருக்கீங்க

என்னடா பிதாமகன் படம் எடுத்திருக்கீங்க

சமீபத்தில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்ததுடன், கேலிக்கு உள்ளானது. நெட்டிசன்கள் பலர், என்னடா சூரரைப் போற்று படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு பிதாமகன் படத்தை எடுத்து வச்சிருக்கீங்க. மாறன் சூர்யாவிற்கு, பிதாமகன் சூர்யா கெட்அப் போட்டு வச்சிருக்கீங்க என கண்டபடி கலாய்த்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X