சூர்யாவை இயக்க போகும் சிறுத்தை சிவா... என்ன ரோல் தெரியுமா ?

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா, ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி-கீர்த்தி சுரேஷ் அண்ணன் - தங்கையாக நடித்துள்ள இந்த படம் பாசம், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ரிலீசான நான்கு நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் மாறுபட்ட விமர்சனங்களை பெற்றாலும், அதிக அளவிலான குடும்ப ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது.

சூர்யாவை இயக்கும் சிறுத்தை சிவா

சூர்யாவை இயக்கும் சிறுத்தை சிவா

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து அடுத்ததாக படம் இயக்க போவதை சிறுத்தை சிவா உறுதி செய்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் படுதீவிரமாக நடந்து வருகிறதாம். இந்நிலையில் இந்த படம் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யாவின் ரோல் இதுதான்

சூர்யாவின் ரோல் இதுதான்

சிறுத்தை சிவா இயக்க போகும் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க போகிறாராம். இதில் ஒன்று பவர்ஃபுல்லான கிராமத்து கேரக்டர். மற்றொன்று ஸ்டையிலான, துடிப்பான சிட்டி இளைஞர் கேரக்டர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கேட்க துவங்கி விட்டனர்.

அடுத்த ஹிட் ரெடி

அடுத்த ஹிட் ரெடி

சூர்யா ஏற்கனவே இரட்டை வேடங்களில் நடித்த பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான், 24 போன்ற படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி சூர்யாவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. அதனால் சூர்யா- சிறுத்தை சிவா- ஸ்டூடியோ கிரீன் - டி.இமான் கூட்டணியில் மற்றொரு மாஸ் ஹிட் படம் தயாராக உள்ளதாக இப்போதே கோலிவுட்டில் பேச துவங்கி விட்டனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

ஜெய்பீம் படத்திற்கு பாராட்டு மழையில் நனைந்து வரும் சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தான் படத்தின் ஷுட்டிங் துவங்குவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

Jai Bhim Slapping Controversy | நான் செய்தது சரி Prakash Raj விளக்கம்
எப்போ ஷுட்டிங் ஆரம்பம்

எப்போ ஷுட்டிங் ஆரம்பம்

இதனால் வாடிவாசல் படத்திற்கு முன், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் 2022 ம் ஆண்டின் ஆரம்பத்தில் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்து விடுவதாக சிறுத்தை சிவா, சூர்யாவிற்கு ஏற்கனவே வாக்குறுதி அளித்து விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X