Karuppu Song: காட் மோடில் சூர்யா.. சாய் அபயங்கரின் சரவெடி.. சீக்கிரம் படம் வெளியாகி வெடிக்குமாம்!
சென்னை: ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து கருப்பு படத்திலும் நடிகர் சூர்யா காட் மோடிலேயே வரப்போகிறார் என்பதை உறுதி செய்யும் விதமாகவே கருப்பு ஃபர்ஸ்ட் சிங்கிளே காட் மோடு என்கிற பாடலாக வெளியாகி உள்ளது. சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ நேற்று வெளியான நிலையில், ஜிங்குச்சா பாடலுடன் ஒப்பிட்டு ட்ரோல்கள் பறந்தன.
ஆனால், காட் மோடு பாடலை கேட்ட பின்னர், அப்படியெல்லாம் இல்லை என்றும் சாய் அபயங்கர் லிரிக்ஸ் தெளிவாக கேட்கும் விதமாக இசை சத்தத்தை கொஞ்சம் குறைத்துள்ளார் என்றும் ஆனால், வேகமாக லிரிக்ஸ் செல்லும் போது அதை ஃபாலோ செய்ய முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கருப்பு படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றாலும், அதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரல: தீபாவளி பண்டிகையையே கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டார். கரூர் துயரம் காரணமாக துக்கம் அனுசரித்து வரும் நிலையில், தீபாவளிக்கு கூட ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ, கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் என மற்ற நடிகர்களின் பட அப்டேட்கள் தீபாவளி ட்ரீட்டாக வெளியாகி உள்ளன.
கருப்பு 'காட் மோட்": ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் தீபாவளியை முன்னிட்டு வெளியான டியூட் படம் 50 கோடி வசூலை கடந்து 100 கோடி வசூலை நோக்கி செல்லும் நிலையில், அடுத்ததாக கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் தீபாவளி ட்ரீட்டாக தற்போது வெளியாகி உள்ளது.
பாடல் செம வைப்பா இருக்கு: "சரவெடி ஆயிரம் பத்தணுமா...
சுருட்டொரு லாரியா கொட்டட்டுமா...
கெடாகறி நெத்திலி வஞ்சரமா...
படையல நெறப்பி தள்ளட்டுமா..." என காட் மோட் பாடலுக்கு விஷ்ணு எடவன் எழுதிய வரிகளையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாடலும் செம வைப்பாக உள்ளது. தீபாவளிக்கு கருப்பசாமியாக சூர்யா தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். சீக்கிரமே படம் ரிலீஸாகி பட்டாசாக வெடிக்கும் என்றும் டீசரை போலவே ஃபர்ஸ்ட் லுக்கிலும் ரிலீஸ் தேதி அறிவிப்பு இல்லாமல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











