»   »  வாரணம் ஆயிரம் - சூர்யா விளக்கம்

வாரணம் ஆயிரம் - சூர்யா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரணம் ஆயிரம் படத்தை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்தப் படத்தை முடிப்பது எனது லட்சியம். அதேபோல வேல் படத்திலும் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார் சூர்யா.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் நடிக்க ஆரம்பித்த சூர்யா, திடீரென ஹரியின் வேல் படத்திற்கு ஒட்டுமொத்தமாக 75 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், தனது படத்தை முடித்துக் கொடுக்காமல், வேல் படத்திற்கு சூர்யா போகக் கூடாது என்று கூறி தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் இன்று கூட்டம் கூடி பிரச்சினைக்குத் தீர்வு காணவுள்ளனர்.

இந்த நிலையில்,இப்பிரச்சினை தொடர்பாக சூர்யா கூறுகையில்,

வாரணம் ஆயிரம் படம் எனது கனவுப் படம். இந்தப் படத்தை ஒதுக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை, செயல்படவில்லை.

வாரணம் ஆயிரம் படத்தின் இயக்குநருடன் பேசி விட்டுத்தான் வேல் படத்திற்குக் கால்ஷீட் கொடுத்தேன்.

என்னைப் பொருத்தவரை வாரணம் ஆயிரம் படத்தை நான் முக்கியமாக கருதுகிறேன். இந்தப் படத்திற்கு இயக்குநர் திட்டமிட்டபடி கால்ஷீட் கொடுக்க எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில்தான் 75 நாட்களில் வேல் படத்தை முடித்து விடுவதாக ஹரி உறுதியாக கூறினார். இதனால்தான் அப்படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன்.

வேல் படத்தை முடித்து விட்டு வாரணம் ஆயிரம் படத்திற்கு வருவேன். அப்படத்தை முடித்த பிறகே மற்றப் படங்களில் நடிக்கச் செல்வேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். வாரணம் ஆயிரம் படத்திலிருந்து நான் விலகவில்லை என்றார் சூர்யா.

தயாரிப்பாளர் கவுன்சிலில் இன்று நடைபெறும் கூட்டத்திலும் தனது நிலையை தெளிவாகச் சொல்லவுள்ளார் சூர்யா. தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கவுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil