»   »  ஆசின்-சூர்யாவின் வேல்

ஆசின்-சூர்யாவின் வேல்

Subscribe to Oneindia Tamil

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஆசின் நடிப்பில் உருவாகும் வேல் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்தப் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்த கட்ட ஷூட்டிங்கை ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடத்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் உள்ளுக்குள் ஏதோ கசமுசா உருவாகி வேல் படத்திற்கு 75 நாட்களுக்கான கால்ஷீட்டை ஒதுக்கினார் சூர்யா. இதனால் அதிர்ச்சியான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.

தனது நிலை குறித்து சூர்யா விளக்கம் அளித்து கடிதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தனது புகாரை திரும்பப் பெற்றார் ரவிச்சந்திரன். மேலும் அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

அதன்படி, வேல் படத்தை முடித்து விட்டு வாரணம் ஆயிரம் படத்தை முடித்துக் கொடுப்பதாக தெரிவித்தார் சூர்யா. அதை ரவிச்சந்திரனும் ஏற்றுக் கொண்டார்.

ஒரு வழியாக பிரச்சினைகள் தீர்ந்து இப்போது வேல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. சூர்யா, ஆசின் சம்பந்தப்பட்ட போட்டோ ஷூட் முடிந்து படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.

சூர்யா, ஆசின் சம்பந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்குகிறார் ஹரி. முற்றிலும் வித்தியாசமான தோற்றத்துடன் சூர்யாவும், ஆசினும் தோன்றுகின்றனர். மோகன் நடராஜன் படத்தைத் தயாரிக்கிறார்.

மூக்குக் கண்ணாடியுடன் ஆசினும், முறுக்கி விடப்பட்ட மீசையுடன் சூர்யாவும் படு வித்தியாசமான கெட்டப்புடன் இப்படத்தில் நடிக்கின்றனர். காரைக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டு பாடல் காட்சிகளுக்குத் திட்டமிட்டுள்ளார் ஹரி.

படத்தை 2 மாதங்களுக்குள் முடிக்கவும் தீர்மானித்துள்ளார். அதற்கேற்ப அனைத்தையும் முன் கூட்டியே திட்டமிட்டு விட்டாராம் ஹரி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil