»   »  சபாஷ் சூர்யா

சபாஷ் சூர்யா

Subscribe to Oneindia Tamil

எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் ஒன்றில் சூர்யா நடித்துள்ளார்.

மனிதன் பூமிக்கு வருவதற்கு முன்பு இயற்கை வளங்கள் எல்லாம் சீரும், சிறப்புமாகவே இருந்தன. ஆனால் மனிதன் வசம் அந்த இயற்கை வளங்கள் சிக்கும்போது அவற்றை சின்னாபின்னப்படுத்தி விடுகிறான்.

நோய்களும், சுற்றுச்சூழல் தீங்குகளும் நீக்கமற நிறைந்து விடுகின்றன. அத்தனைக்கும் நாம்தான் காரணம் என்பதை யாருமே ஒத்துக் கொள்வதில்லை.

சிலர் மட்டுமே இதை உணர்ந்து அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நடிகர் சூர்யாவை அந்த வகையில் சேர்க்கலாம்.

சுற்றுச்சூழல் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்பும் வகையிலான குறும்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

தனக்குள்ள டைட்டான பட ஷெட்யூல்களுக்கு மத்தியில் இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் சூர்யா. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இந்த படத்தைத் தயாரிக்கிறது.

சூர்யா தவிர நாசரும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சாதாரண கருத்துப் படமாக இல்லாமல் டிடிஎஸ் இசையுடன் கூடியதாக இந்த பிரசாரப் படத்தை பிரமாதமாக எடுத்துள்ளனர்.

நகரங்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் இப்படத்தை திரையிடவுள்ளனர். சம்பந்தப்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் முக்கியப் படங்களுக்கு முன்பாக இந்த பிரசாரப் படம் திரையிடப்படுமாம். கிராமப் புற தியேட்டர்களிலும் இதை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது, எய்ட்ஸ் நோய் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் உன்னத நோக்கத்துடன் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது மக்களிடையே சென்றடையும், இதன் செய்தி உரிய முறையில் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வுப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

இந்தக் குறும்படத்தில் நடிப்பதற்காக ஒரு காசு கூட சம்பளமாக வாங்கவில்லையாம் சூர்யா.

சூர்யாவுக்கு தாராளமாக ஒரு சபாஷ் போடலாம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil