»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

ஒரு படத்தை முடித்துவிட்டே அடுத்த படத்தில் நடிப்பது என்பதில் மிகத் தீவிரமாக இருக்கும் சூர்யா, படு பயங்கர பிஸி.

அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் வந்து வீட்டைத் தட்டி வருவதால் யாருக்கு முதலில் கால்ஷீட் தருவது என்று தெரியாமல் திணறிவருகிறார்.

இப்போது இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் கலைப்புலி எஸ்.தாணுவின் மேற்பார்வையில் உருவாகும் மாயாவில் நடித்துவருகிறார் சூர்யா. இயக்குனர் சிங்கம்புலி படத்தை படு கலகலப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கலாட்டா பேர்வழி கேரக்டரில் சூர்யாவும் பின்னி எடுத்து வருகிறாராம். கூடவே ஹீரோயின் ஜோதிகா என்பதால் கூடுதல் குஷிசூர்யாவுக்கு. சூட்டிங் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டது.

டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு ஆகிய விஷயங்களும் பேரலலாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தையடுத்து கஜினி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இயக்கப் போவது முருகதாஸ். முழுக்க முழுக்க ஆக்ஷன்படமாக உருவாகப் போகிறதாம். சூர்யாவை இதுவரை பார்த்திராத அடிதடி கேரக்டரில் காட்ட இருக்கிறார்கள்.

ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் இந்தப் படம் பூஜை போட்ட சில நாட்களிலேயே உச்சபட்ச விலைக்கு விற்பனையாகிவிட்டதாம்.சூர்யாவுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக படத்தை வாங்க வினியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவியதாம். இதனால்தயாரிப்பாளர் விலையை நன்றாக ஏற்றி வைத்து விற்றிருக்கிறார்.

அதிக விலைக்கு விற்கப்பட்டதால் படத்தை முன்பு திட்டமிட்டதை விட மிகப் பிரமாண்டமானதாக எடுக்க முடிவுசெய்துள்ளார்களாம். படத்தின் பாடல்கள் கம்போசிங்கிற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை சிங்கப்பூருக்குபறந்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக உடம்பை மீண்டும் காக்க.. காக்க மாதிரி ஸ்டிராங் செய்யச் சொல்லிவிட்டாராம் முருகதாஸ். இதனால்,காலையும் மாலையும் ஜிம்மிலேயே கழிக்கிறார் சூர்யா. கூடவே ஜோதிகாவும் ஆஜராகிவிடுகிறார்.

சூர்யா-ஜோதிகா வந்துபோகும் ஒரு மணி நேரத்துக்கு மற்றவர்களுக்கு ஜிம்மில் தடா போட்டுவிட்டார்களாம். சூர்யாவுக்கு பயிற்சிஅளிக்க மும்பையில் இருந்து ஒரு பாடி பில்டிங் ஸ்பெஷலிஸ்டையும் வரவழைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கும் சூர்யா மிகவும் மெனக்கெட்டு உடலை ஏற்றி வருகிறார்.

இதை முடித்துவிட்டு இயக்குனர் சரணின் தயாரிப்பில் டைரக்டர் ஹரி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் சூர்யாவின் கால்ஷீட்டுக்காக பெங்களூரைச் சேர்ந்த ஆர்.எஸ். கெளடா என்ற தயாரிப்பாளர் உள்பட பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடிய மகாராஜா என்ற படத்தை சூர்யாவை வைத்து எடுக்கத் தீவிரமாகஇருக்கிறார் கெளடா.

ஆனால், தன் கைவசம் இருக்கும் படங்களை முடிக்கவே 6 முதல் 8 மாதங்கள் ஆகிவிடும் என்பதைச் சொல்லி கெளடாவிடம்அட்வான்ஸை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

சம்பள விஷயத்திலும் பார்ட்டி ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை. தாணுவும் பாலாவும் சேர்ந்து வலியுறுத்தித் தான் மாயாவிபடத்துக்காக ரூ. 1 கோடியை சூர்யாவிடம் திணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை சம்பளத்தை ரூ. 75 லட்சத்துக்குள் தான் அடக்கி வைத்திருந்தார். ரூ. 2 கோடி தர்றோம் என்று சொல்லி கால்ஷீட்கேட்பவர்களிடமும் காத்திருக்கவே சொல்கிறார் சூர்யா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil