»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் சரண் தயாரிக்கவுள்ள பிரமாண்டமான படத்தை ஹரி இயக்கவுள்ளார். இதில் ஹீரோ சூர்யா.

சாமியைத் தொடர்ந்து அருள், ஐயா ஆகிய படங்கள் வரிசையாக தொங்கிப் போனதால் உடனடியாக ஒரு வெற்றிப் படத்துக்காகஏங்கிக் கொண்டிருக்கும் ஹரியை வைத்து அடுத்த படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார் சரண்.

சரணிடம் உதவியாளராக இருந்து இயக்குனரானவர் தான் ஹரி. இருவரும் சேர்ந்து கதையை தயார் செய்துவிட்டு ஹீரோவாகயாரைப் போடலாம் என யோசித்தபோது இருவருக்கும் தோன்றியது சூர்யா தானாம்.

மாயாவி பெரிய அளவில் போகாவிட்டாலும் சூர்யாவுக்கு மவுசு குறையவில்லை. ஆக்ஷன், ஹுயூமர், காதல் என எதைக்கொடுத்தாலும் அற்புதப்படுத்தும் சூர்யா மீது வித்தியாசமான கதைகளை ஏற்றி சுமக்க விடுவதில் இளம் இயக்குனர்கள் மத்தியில்பெரும் போட்டியே நடக்கிறது.

அந்த வகையில் தான் இப்போது இயக்குனர் ஏ.சி.முருகதாசின் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.இதில் இளம் தொழிலதிபராக, மிகப் பெரும் செல்போன் நிறுவன உரிமையாளராக நடிக்கும் சூர்யாவையும், செல்போன்களைவைத்து நடக்கும் கிரைம்களையும் பின்னி ஒரு ஆக்ஷன் கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

மும்பையில் இருந்து அமைதியான வாழ்வு தேடி சென்னையில் குடியேறும் சூர்யா சந்திக்கும் பிரச்சனைகள், அண்டர்வோர்ல்ட்கிரிமினல்களுடனான மோதல்கள் தான் கதையாம்.

கிண்டி கேம்ப கோலா மைதானத்தில் (பாபா எடுத்தாங்களே) படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் இடது கை பழக்கமுள்ளவராக நடிக்கிறார் சூர்யா. இடதுகையால் வேகமாக எழுதவும் வேண்டிய அவசியம். மற்றஹீரோக்கள் என்றால் கையை மட்டும் குளோஸ்-அப்பில் எடுத்து முடிக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால், சூர்யா மிகவும்மெனக்கெட்டு இடது கையால் எழுதக் கற்றுக் கொண்டாராம். இதற்கும் ரொம்பவே உதவியாக இருந்தது வழக்கமாகவே இடதுகை பழக்கமுள்ள ஜோ.. ஜோ.. ஜோதிகாவே தானாம்.

மேலும் மாயாவி படத்துக்கா உடம்பை குறைக்கச் சொன்னார் இயக்குனர் சிங்கம்புலி. இதற்காக சில கிலோக்களை இழந்தசூர்யாவைக் கூப்பிட்டு கஜினியில் ஆக்ஷனுக்காக உடம்பை முறுக்குப்பா என்று இயக்குனர் சொல்லிவிட, உடலை ஜிம்மில்வைத்து திம் கட்டையாக்கியிருக்கிறார்.

மேலும் படத்துக்கு சிலம்பாட்டமும் குங்பூவும் தேவைப்பட்டதால் அதையும் கற்றிருக்கிறார்.

நினைத்த மாதிரி உடலை வளைப்பதில் கமலுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டார் சூர்யா. மேலும் சென்னையின் உயர் தரஜிம் சர்க்கிளில் சூர்யாவுக்கு தனி பெயரும் கிடைத்திருக்கிறது. சமூபத்தில் ஒய்.எம்.சி.ஏவில் ஜிம் டிரெய்னர்களுக்கான டிப்ளமோபடிப்பைத் துவக்கி வைக்க சூர்யாவை அழைத்திருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


இந்தப் படத்தில் சூர்யாவுக்கு முதலில் ஒரு ஹீரோயின் தான் என்று முடிவாகி ஆசின் புக் செய்யப்பட்டார். பின்னர் கதையைமேலும் விறுவிறுப்பாக்கிவிட்ட முருகதாஸ், இப்போது கோலிவுட்டின் ஹாட்-கேக் ஆகிவிட்ட நயனதாராவையும் இழுத்துப்போட்டுவிட்டார்.

இப்போது இந்த இரு கேரளத்து குட்டிகளும் படத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் போட்டா போட்டி போட்டபடி,தாராள மோதலிலும் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கின்றன.

சுள்ளானில் கையை சுட்டுக் கொண்ட தயாரிப்பாளர் சந்திரசேகர் விட்ட காசை பார்க்க வேண்டும் என்ற ஜோரில் படத்தை படுபிரமாண்டமாகவே எடுத்து வருகிறார். பாடல்களுக்கான இசை கோர்ப்பு வேலையை மலேசியாவில் போய் செய்துவிட்டுவந்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

பாடல்களை வித்தியாசமான லொகேசன்களில் படம் பிடிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். நயனதாரா மற்றும் ஆசினுடன் சூர்யாடான்ஸ் ஆடப் போவது துருக்கியின் இஸ்தான்புல் உள்ளிட்ட இடங்களிலாம் (சமீபத்தில் சந்திரமுகிக்காக ரஜினியுடன்இஸ்தான்புல் போய் ஆடிவிட்டு வந்தார் நயனதாரா).

படத்தின் கேமராவை கவனிப்பது காக்க காக்க கேமராமேன் ஆர்.டி.ராஜசேகரே தான். ஹீரோயின் விஷயத்தில் எல்லாம்தலையிடாத சூர்யா, ராஜசேகர் தான் வேண்டும் என்பதில் மட்டும் தீவிரமாக இருந்தாராம்.

இந்தப் படம் முடிந்தவுடன் அடுத்த இரு மாதங்களில் துவங்கப் போகிறது ஹரியின் இயக்கத்திலான புதிய படம். படத்துக்கு ஆறுஎன பெயரிட்டுள்ளார்கள். இதில் சூர்யாவுக்கு ஜோடி த்ரிஷாவாம்.

அது என்ன ஆறு? நம்பரை சொல்கிறார்களா அல்லது ஆற்றை குறிக்கிறார்களா என்று விசாரித்தபோது கிடைத்த பதில்..இரண்டுமே இல்லை என்பது தான்.

இது குறித்து ஹரியிடம் கேட்டபோது, படத்தில் சூர்யாவின் பெயர் ஆறுமுகம். அவரை சுருக்கமாக ஆறு என்று அழைப்பார்கள்.அதைத் தான் படத் தலைப்பாக்கியிருக்கிறோம் என்றார்.

சமீபத்தில் கன்னடத்தில் இருந்து சென்ற மிகப் பெரிய தயாரிப்பாளரான ஆர்.எஸ்.கெளடா, தமிழில் படம் எடுக்க விரும்பிசூர்யாவைப் பார்த்திருக்கிறார். சுமார் ரூ. 1 கோடிக்கும் அதிகமாகவே சம்பளம் பேசியவர் பெரிய தொகையை எடுத்துஅட்வான்ஸாகக் கொடுக்க வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார் சூர்யா.

கையில் கதையும் இல்ல, டைரக்டரையும் முடிவு செய்யல.. என்னை மட்டும் முதலில் புக் செய்துவிட்டு அப்புறம் கதை தேடுவதுஎல்லாம் சரிப்படாது என்று கூறிவிட்டாராம் சூர்யா. பணத்துக்கு ஆளாய் பறக்கும் கோலிவுட்டில் இப்படி ஒரு ஆள் எனஆச்சரியப்படுகிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil