»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
நடிகர் சூர்யா விரைவில் தனது தம்பி கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யா கையில் இருக்கும் ஒரே படம் சென்னையில் ஒரு மழைக்காலம். வாய்ப்புகள் ஏதும் வரவில்லை போலும்என்று நினைக்க வேண்டாம். வீட்டின் முன் ரவுண்டு கட்டி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால்,சிரித்த முகத்துடன் சூர்யாவும், அதைவிட சிரித்த முகத்துடன் தந்தை சிவக்குமாரும்தயாரிப்பாளர்களுக்கு கும்பிடு போட்டு அனுப்பிவிடுகிறார்கள்.

முன்பு போல் துக்கடா படங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாக வைத்திருக்கிறார் சூர்யா.

தனது நடிப்புக்குத் தீனி போடக் கூடிய கதைகளையும், அத்தகைய கதைகளை ஒரு நல்ல சினிமாவாககாட்சிப்படுத்தத் தெரிந்த இயக்குநர்களையும் மட்டுமே சூர்யா தேர்வு செய்கிறார். கெளதம் அத்தகைய இயக்குநர்என்பதால்தான் அவரது அடுத்த படத்திலும் நடிக்க சம்மதித்தார்.

சென்னையில ஒரு மழைக்காலம் முடிந்ததும், அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வப்படுகிறார்.பாலா அடுத்த வருடம் கமலை வைத்து ஒரு படம் பண்ணவிருக்கிறார். அதற்கு முன்னதாக தனுஷை வைத்து ஒருபடம் இயக்குவதாக ப்ளான் இருந்தது.

ஆனால் தனுஷூக்கு தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் போட்டிருக்கும் கிடுக்கிப்பிடிகளைப் பார்த்தால்,2005ம் வருட முடிவில்தான் அவர் புதிய படங்களை ஒப்புக் கொள்ள முடியும் போலத் தெரிகிறது. அதுவரை பாலாகாத்திருக்க மாட்டார்.

எனவே அந்த வாய்ப்பை தன் பக்கம் திருப்பிவிடலாம் என்ற ஆசையில் சூர்யா இருக்கிறார். ஒருவேளை அதுநடக்காமல் போனால், வீட்டில் இருக்கவே இருக்கிறார் ஒரு இயக்குனர்.

யார் என்று கேட்கிறீர்களா? சூர்யாவின் தம்பிதான். சூர்யாவைப் போலவே ஹேன்ட்சமாக இருக்கும் அவரது தம்பிகார்த்திக்குக்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது, டைரக்ஷனில் தான் முழு ஆர்வமும். இதனால் அமெரிக்காவில்பார்த்து வந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேலையை அப்படியே விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

இப்போது அப்பா சிவக்குமார் ரெக்கமன்டேசனில் இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக சேர்த்து விட்டார்கார்த்திக்.

பட இயக்கத்தில் கொஞ்சம் தேறி விட்டதாக உணரும் கார்த்திக் விரைவில் மணிரத்தினத்திடமிருந்து விலகிதனிக்குடித்தனம் ஆரம்பிக்க உள்ளார். தனது முதல் படத்தை சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம்கார்த்திக்.

ஆல் தி பெஸ்ட் தம்பி!


Please Wait while comments are loading...