»   »  40 வயதில் சூர்யா... ட்விட்டரில் நட்சத்திரங்கள் வாழ்த்து மழை

40 வயதில் சூர்யா... ட்விட்டரில் நட்சத்திரங்கள் வாழ்த்து மழை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சூர்யா இன்று தனது 40 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1975 ம் வருடம் ஜூலை மாதம் 23 ம் தேதி நடிகர் சிவகுமார் - லட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் சூர்யா, சூர்யாவின் இயற்பெயர் சரவணன்.

2006 ம் ஆண்டு உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார், இந்தத் தம்பதியினருக்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி கார்த்தியும் தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவை ட்விட்டரில் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர், அவர்களின் ட்வீட்களில் இருந்து சிலவற்றைக் காணலாம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா- சிம்பு

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா, எனது ரசிகர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்துகிறேன் என்று நடிகர் சிம்பு சூர்யாவை வாழ்த்தியுள்ளார்.

பார்ட்டிக்கு நன்றி - ஆர்யா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா ஒரு அருமையான விருந்தைக் கொடுத்ததற்கு நன்றி. இது ஒரு நல்ல நேரமாக இருக்கிறது, இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பானதாகஅமைய வாழ்த்துகின்றேன் " என்று நடிகர் ஆர்யா சூர்யாவை வாழ்த்தியிருக்கிறார்.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் - தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று நடிகர் தனுஷ் வாழ்த்தியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சிவகார்த்திகேயன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா - விவேக்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா என்று நடிகர் விவேக் சூர்யாவை வாழ்த்தியிருக்கிறார்.

திறமையான நடிகர் - பிரணிதா

எனக்குப் பிடித்தமான நடிகரும், மிகத்திறமையான நடிகர்களில் ஒருவருமான சூர்யாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகை பிரணிதா வாழ்த்தியிருக்கிறார்.

பாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயநிதி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா பாஸ் என்று வாழ்த்தியிருக்கிறார் நடிகர் உதயநிதி.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா - பிரேம்ஜி அமரன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா என்று நடிகர் பிரேம்ஜி அமரன் வாழ்த்தியிருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - துல்கர் சல்மான்

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார், நீங்கள் இதே போன்று பலவருடங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என்று மலையாள இளம்நடிகர் துல்கர் சல்மான் வாழ்த்தியிருக்கிறார்.

தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் சூர்யா அவர்களை, இந்த நன்னாளில் நாமும் வாழ்த்துவோம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா.

English summary
Surya Birthday - Celebrities Twitter Wishes
Please Wait while comments are loading...