»   »  சுந்தர்.சி பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

சுந்தர்.சி பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது எஸ் 3 தவிர வேறு எந்தப் படத்திலும் சூர்யா ஒப்பந்தமாகவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

24 படத்தைத் தொடர்ந்து எஸ் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Surya Denies the High Budget Movie Rumors

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கிறது.

ஆனால் இப்படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருக்குமாறு சூர்யா சார்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்த செய்திகள் எதையும் நம்ப வேண்டாம். ஒரு படம் முடிவாவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, அதுவரை காத்திருங்கள் என்று கூறியுள்ளனர்.

இதுவரை எதுவும் உறுதியாகவில்லை என்றாலும் அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருக்குமாறு கூறியதால், சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதுதவிர சென்னை 28 படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று கூறி அப்படம் பற்றிய வதந்திகளுக்கு, படக்குழு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

English summary
Actor Surya Denies the 100 Crore Budget Movie Rumors.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil