»   »  சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்- நடிகர் சூர்யா வருத்தம்!

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்- நடிகர் சூர்யா வருத்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் சபரீசனின் மரணத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை நடிகர் சூர்யா பகிர்ந்திருக்கிறார்.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. படங்களில் நடிப்பது தவிர்த்து சமூக செயல்களிலும் சூர்யா அக்கறை காட்டி வருகிறார்.இதனால் ஏராளமான இளைஞர்கள் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சபரீசன் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் அடிபட்டு உயிரிழந்தார்.இது மற்ற சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியைம், வருத்தத்தையும் ஒருசேர அளித்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா ''சபரீசனின் மரணம் துரதிர்ஷ்டவசமான ஒன்று. அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இறந்து போன சபரீசன் ஆத்மா சாந்தி அடையட்டும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Surya's Die Hard Fan Sabareeshan Yesterday Died in Road Accident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil