»   »  கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் சூர்யா

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் சூர்யா

Subscribe to Oneindia Tamil
Surya with Asin
தசாவதாரம் படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

கமல்ஹாசனை வைத்து இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தசாவதாரம் படத்தை இயக்கி முடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார்.

இதுதொடர்பாக சூர்யாவுடன் அவர் பேசியுள்ளார். இருவரும் இணைந்து புதிய படத்தைக் கொடுக்கப் போகின்றனர். இருவரும் இணைவது இது முதல் முறை என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வாரணம் ஆயிரம் படத்ைத முடித்துக் கொண்டிருக்கும் சூர்யா அடுத்து ஏவி.எம்மின் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை முடித்து விட்டு ரவிக்குமார் படத்திற்கு அவர் வரவுள்ளார்.

ஏற்கனவே அஜீத்தை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் சூர்யா மற்றும் அஜீத் படங்களை இயக்கப் போகிறாராம் ரவிக்குமார்.

சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார் இணையும் புதிய படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினரான ஞானவேல் தயாரிக்கிறார். இவர்தான் சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil