»   »  தெலுங்குக்கு முக்கியத்துவம் தரும் சூர்யா, லாரன்ஸ்!

தெலுங்குக்கு முக்கியத்துவம் தரும் சூர்யா, லாரன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும்பாலான தமிழ் ஹீரோக்களுக்கு தெலுங்கில் போய் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாகவே இருக்கிறது. அதில் முக்கியமனவர்கள் சூர்யா, கார்த்தி, விஷால். இவர்கள் மூவருமே தங்களது படங்களின் தெலுங்கு பதிப்பில் அதீத அக்கறை காட்டுவார்கள். இந்த வாரம் கூட தெலுங்கில் ரெமோ ரிலீஸ் ஆகிறது.

அதற்கான புரமோஷன்களில் கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன். இந்த அளவுக்கு தமிழ் ஹீரோக்களை தெலுங்கு சினிமா ஈர்க்க காரணம் பரந்து விரிந்த டோலிவுட் மார்க்கெட்.

Surya, Lawrence keen on their Telugu dubbing movies

தமிழ்நாட்டில் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. எண்ணினால் ஆயிரம் கூட தேறாது. ஆனால் தெலுங்கில் இன்னும் மூவாயிரத்துக்கு அதிகமான தியேட்டர்கள் இருக்கின்றன. பிசினஸும் பெரிது. எனவேதான் தெலுங்கில் அவ்வளவு கவனம் நம் ஹீரோக்களுக்கு.

லாரன்ஸ் நடிக்கும் சிவலிங்கா படத்தின் பிரஸ்மீட் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்தது. ஆனால் இன்னும் தமிழில் புரமோஷன் தொடங்கவே இல்லை.

Surya, Lawrence keen on their Telugu dubbing movies

சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ் 3 படத்துக்கும் தெலுங்கு மொழிக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது (அதனால்தான் பக்கா தெலுங்கு மசாலா மாதிரி எடுத்திருக்கிறார்களோ?). படத்தில் ஆந்திர போலீஸாகத்தான் நடித்திருக்கிறார் சூர்யா. பெரும்பகுதி ஆந்திராவில் நடப்பது போலத் தான் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. புரமோஷன்களிலும் தெலுங்குக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதாவது தமிழ் இரண்டாம் பட்சம்தான். தெலுங்கு நேரடி படங்களைப் போல புரமோட் செய்கிறார்கள்!

தமிழையும் கவனிங்க பாஸ்!

English summary
Tamil heroes like Surya, Lawrence are giving more important to their Telugu version movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil