»   »  பேஸ்புக்கில் என் பெயரில் மோசடி... - நடிகர் சூர்யா புகார்

பேஸ்புக்கில் என் பெயரில் மோசடி... - நடிகர் சூர்யா புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேஸ்புக்கில் தன் பெயரில் சிலர் போலியாக கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக நடிகர் சூர்யா புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

Surya to lodge complaint on a fake FB page in his name

இதுகுறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "சில மணி நேரத்துக்கு முன்புதான் பேஸ்புக்கில் என் பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என் கவனத்துக்கு வந்தது.

இது எனது உண்மையான அதிகாரப்பூர்வமான பக்கம் என நம்பி உலகெங்கும் உள்ள பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

Surya to lodge complaint on a fake FB page in his name

இது போலியான பக்கமாகும். நடிகர் சூர்யாவுக்கும் இந்த பேஸ்புக் பக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யாரோ சிலர் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கவிருக்கிறோம்.

ட்விட்டர், பேஸ்புக் என எந்த சமூக வலைத் தளத்திலும் சூர்யா இல்லை. அப்படி அவர் இணைந்தால் அது குறித்து முறையாகத் தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Actor Surya denied that he is neither on Facebook nor Twitter, but some one has created a fake page in his name in facebook.
Please Wait while comments are loading...