»   »  தமிழ் சினிமாவில் இப்போது ரஜினிக்கு அடுத்தது சூர்யாதான்!- சொல்கிறார் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமாவில் இப்போது ரஜினிக்கு அடுத்தது சூர்யாதான்!- சொல்கிறார் ஞானவேல்ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா வியாபாரத்தைப் பொறுத்தவரை இப்போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பது சூர்யாதான் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி, புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ரஜினிக்கு அடுத்த இடம் யாருக்கு என்பதில் கடந்த இருபது ஆண்டுகளாக பெரிய போட்டியே நடந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்தவர் கமல் ஹாஸன். ஆனால் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் அஜீத், விஜய் இருவரும் மாறி மாறி ரஜினி இடத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். அதாவது படங்களின் ஹிட் விகித அடிப்படையில்.

Surya places next to Rajinikanth in Tamil cinema box office

முதலிடத்தில் ரஜினி, அடுத்த இடம் விஜய் அல்லது அஜீத்துக்கு... இப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரு ரேங்கிங் வைத்திருக்கிறார்கள்.

இப்போது அதை மாற்றியே தீர வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார் போலிருக்கிறது ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவும் அவரது அலுவலக நிர்வாகிகளும்.

நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்த சிங்கம் 3 (சி3) படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்டுடியோ க்ரீன் நிர்வாகி சதீஷ், "சிங்கம் 3 படத்தின் வியாபாரம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடக் கூடாது என்றுதான் இருந்தோம். ஆனாலும் இப்போது ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் என்றால் அது சூர்யாவுக்குத்தான். சிங்கம் 3 அதை மீண்டும் நிரூபித்துள்ளது," என்றார்.

அடுத்துப் பேசிய ஞானவேல்ராஜா, "சூர்யாவுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது. இப்போது நான் சொல்லப் போகிற விஷயத்தை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை. ஆனால் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் அவரது மார்க்கெட் மதிப்பு உங்களுக்குப் புரியும். தமிழ், தெலுங்கில் ரஜினி சாருக்கு அடுத்து சூர்யாதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சிங்கம் 3 படம் வெளியாவதற்கு முன்பே ரூ 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி அதை நிரூபித்துள்ளது. தெலுங்கிலும் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் சூர்யாவுக்குத்தான்," என்றார்.

English summary
Studio Green Gnanvel Raja says that Surya placed next to Rajinikanth in Tamil cinema business.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil