»   »  'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் 'பாக்ஸராக' நடிக்கும் சூர்யா?

'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் 'பாக்ஸராக' நடிக்கும் சூர்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா பாக்ஸராக நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களைத் தொடர்ந்து ரஜினியின் கபாலியை இயக்கிய ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். 'மெட்ராஸ்' படத்துக்குப் பின் சூர்யாவை இயக்கவிருந்த ரஞ்சித்திற்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததால், சூர்யாவிடம் சொல்லிவிட்டு கபாலியை இயக்க சென்றார்.

தற்போது 'கபாலி' வெளியாகி விட்டது. தொடர்ந்து சூர்யாவை இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்துக்குப் பின் ரஞ்சித் படத்தில் அவர் நடிப்பார் எனத் தெரிகிறது.

Surya Play a Boxer

'எஸ் 3' படத்தில் போலீசாக நடித்து வரும் சூர்யா அடுத்ததாக பாக்ஸர் வேடத்தில் நடிக்கப் போகிறாராம். இதற்காக தனது உடல் எடையை சூர்யா அதிகரிக்கப் போவதாக கூறப்படுகிறது.

வட சென்னை பகுதிகளில் வாழும் பாக்ஸர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை ரஞ்சித் எழுதியிருக்கிறாராம். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இதுவரை சூர்யா எந்தப் படத்திலும் பாக்ஸராக நடித்ததில்லை என்பதால் இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

சூர்யா படத்துக்குப் பின் மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said after S3 Surya Play a Boxer for his Next Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos