»   »  24... 1 நிமிட டீசர்.. நச்சுன்னு நாலு கெட்டப்பில் சூர்யா!

24... 1 நிமிட டீசர்.. நச்சுன்னு நாலு கெட்டப்பில் சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 24 படத்தின் 1 நிமிட டீசர், ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் 24 படத்தில் சூர்யா 4 விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார் என்னும் உண்மை தற்போது வெளியாகியுள்ளது.


கதைப்படி விஞ்ஞானி, பைலட், ஆத்ரேயா என்று 3 விதமான தோற்றங்களில் சூர்யா நடித்திருக்கிறார். ஆனால் 4 வதாக வில்லன் ஆத்ரேயாவின் முதுமைத் தோற்றத்திலும் சூர்யா நடித்திருக்கிறார்.


Surya Plays 4 Roles in 24

அதன்படி பார்த்தால் மொத்தம் 4 விதமான தோற்றங்களில் இப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். டீசரின் ஆரம்பத்தில் விஞ்ஞானி மற்றும் கேங்க்ஸ்டர் என்று 2 விதமான சூர்யா வருகின்றனர்.


விஞ்ஞானி சூர்யா-நித்யாமேனன் தம்பதிக்கு ஒரு குழந்தை இருப்பது போல அதில் காண்பித்துள்ளனர். அந்தக் குழந்தைதான் பைலட் சூர்யா.


மற்றொருபுறம் கேங்க்ஸ்டர் மற்றும் வயதான வில்லன் என்று இன்னும் 2 வித தோற்றங்களில் சூர்யா வருகிறார். ஆகமொத்தம் படத்தில் 4 விதமான தோற்றங்களில் சூர்யா வருவது உறுதியாகிவிட்டது.


ஏற்கனவே டீசரால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழ்நிலையில், சூர்யாவின் வித்தியாச தோற்றங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் இப்படத்தில் சூர்யா, நித்யாமேனன், சமந்தா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டெயிர்டைன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

English summary
Surya Plays 4 Different Roles in 24 Movie, The Movie Teaser Now Reveals this Information.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil