»   »  24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்- சூர்யா

24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்- சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய 24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் '24' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.


இதில் இயக்குநர் விக்ரம் குமார், சூர்யா, சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மதன் கார்க்கி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


ஆத்ரேயா கேம்

ஆத்ரேயா கேம்

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா 'ஆத்ரேயா ரன்' கேமை வெளியிட்டார். இந்த கேம் மே 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான 'அஞ்சான்', 'ஜில்லா', 'துப்பாக்கி' போன்ற படங்களுக்கு இதேபோல கேம்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


நேருக்கு நேர்

நேருக்கு நேர்

விழாவில் பேசிய சூர்யா ''நேருக்கு நேர்', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'நந்தா', 'கஜினி', 'பிதாமகன்', 'காக்க காக்க', 'சிங்கம்' ஆகிய படங்கள் என்னுடைய திரைப் பயணத்தில் முக்கியமானவை. அந்த வரிசையில் '24' படமும் தற்போது இணைந்திருக்கிறது. வருகின்ற மே 6ல் வெளியாகும் இப்படம் உலகம் முழுவதும் 2150 திரையரங்குகளில் வெளியாகிறது.


200 கோடி

200 கோடி

'24' திரைப்படம் 200 கோடி கிளப்பில் நுழைய வேண்டும் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சமந்தா இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அதேபோல நடிகை நித்யாமேனன் அவரது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்த தகவல்களை இப்போது என்னால் வெளியிட முடியாது அது ரகசியம்" என்று பேசினார்.


தணிக்கை

தணிக்கை

இப்படத்திற்கான தணிக்கைச்சான்றிதழ் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. '24' படத்திற்கு யூ சான்றிதழ் கிடைக்குமா? இல்லை யூ/ஏ சான்றிதழா? என்பதை அறிய படக்குழுவுடன் இணைந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.


English summary
24 the Movie Press Meet Today held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil