»   »  திருட்டு வீடியோவை ஒழிக்கவும் இணைஞர்கள் திரண்டு வரணும்! - சூர்யா

திருட்டு வீடியோவை ஒழிக்கவும் இணைஞர்கள் திரண்டு வரணும்! - சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்கு முன்வந்ததைப் போல திருட்டு வீடியோவை ஒழிப்பதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 (சி3) திரைப்படம் நாளை (9-ந்தேதி) வெளியாகிறது. இதையொட்டி அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சூர்யா சந்தித்து வருகிறார்.


Surya's appeal to fans in abolishing video piracy

நெல்லையில் ஒரு தியேட்டர் விசிட்டை முடித்த பிறகு சூர்யா பேசுகையில், "நான் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த மண்தான். நெல்லை மக்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களது வாழ்க்கையைத்தான் சிங்கம் படத்தில் காட்டியுள்ளோம்.


தற்போது தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் மாணவர்களும் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்கள் நிலத்திற்குள் 20 அடி வரை சென்று நீரை உறிஞ்சுகிறது. அதனால் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும்.


கருவேல மரங்களின் வேர் போன்று திரைத்துறையிலும் திருட்டு சி.டி.க்கள் உள்ளன. அவற்றை ரசிகர்கள்தான் அகற்ற வேண்டும்.


முந்தைய படங்களைப் போல் சிங்கம்-3யிலும் காவல்துறையை பெருமைப்படுத்தியுள்ளோம்," என்றார்.

English summary
Actor Surya has made an appeal to his fans to join hands in removing video piracy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil