»   »  ஜல்லிக்கட்டுடன் நிற்க வேண்டாம்... பிரச்சினைகளுக்குக் குரல் கொடுங்க! - மாணவர்களிடம் சூர்யா

ஜல்லிக்கட்டுடன் நிற்க வேண்டாம்... பிரச்சினைகளுக்குக் குரல் கொடுங்க! - மாணவர்களிடம் சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையோடு நின்றுவிடாமல், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, "மாணவர்களும் , இளைஞர்களும் ஜல்லிக்கட்டுடன் நின்று விடாமல் பல முக்கிய சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் குரலுக்கு இந்த சமூகம் பெரும் மதிப்பு தருகிறது," என்றார்.

Surya's appeal to students community

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, கடந்த வாரங்களில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வரலாறு காணாத போராட்டம் உலகம் அறிந்தது.

இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மட்டும் நடைபெறாமல், பல முக்கிய சமூக பிரச்சனைகளையும் விவாதிக்கும் விதமாக இளைஞர்கள் குரல் எழுப்பினர்.

அதில் ஒன்றாக அந்நிய குளிர்பானங்களையும் தடை செய்யக் கோரி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அந்நிய குளிர்பானங்களை மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்வதில்லை என வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்து ப்ளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதில்லை, ஏரி குளங்கள், கால்வாய்களை தூர் வார வேண்டும் என்ற கோஷங்களை மாணவர்களும் இளைஞர்களும் முன் வைத்துள்ளனர். எனவேதான் அனைத்துப் பிரச்சினைகளையும் மாணவர்களும் இளைஞர்களும் கையிலெடுத்தால், ஒரு புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் சூர்யா.

English summary
Actor Surya has urged students to give voice for all issues for immediate solution.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil