»   »  100 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சூர்யா?

100 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சூர்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகேஷ்பாபு, சூர்யா இருவரையும் தன்னுடைய இயக்கத்தில் நடிக்க வைக்க சுந்தர்.சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி 100 கோடி பட்ஜெட்டில் படம் இயக்கவிருக்கிறார். மஹதீரா, பாகுபலி பாணியில் சரித்திரப் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

Surya in Sundar.C' next Movie

இப்படத்திற்கான கதையை தற்போது அவர் எழுதி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் சரித்திரப் படமென்பதால் இதில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

சூர்யா, மகேஷ்பாபு என தமிழ், தெலுங்கு மொழியின் முன்னணி நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.

இப்படத்தில் கமலக்கண்ணன், சாபு சிரில், திரு என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணிபுரியவுள்ளனர். மற்றொருபுறம் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இப்படத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரில் ஒருவர் இசையமைக்கவுள்ளனர். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சூர்யா நடிக்கும் பட்சத்தில் அவரின் திரையுலக வாழ்வில் மிக அதிக பட்ஜெட் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Surya may be Team up with Sundar.C's Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil