»   »  பஞ்சு படத்தில் சூர்யா

பஞ்சு படத்தில் சூர்யா

Subscribe to Oneindia Tamil
Click here for more images
பழம்பெறும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

பஞ்சு அருணாச்சலத்தின் பி.ஏ ஆர்ட் புரடக்ஷன், தனது 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படத்தைத் தர இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க தீர்மானித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் வேல் படத்தை முடித்து விட்ட சூர்யா, அடுத்து வாரணம் ஆயிரம் படத்தில் முழு மூச்சுடன் நடித்து வருகிறார். இதில் அவருடன் குத்து ரம்யாவும், சமீரா ரெட்டியும் ஜோடி போட்டுள்ளனர்.

இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதை முடித்து விட்டு பஞ்சு படத்துக்கு வருகிறார் சூர்யா.

ஏற்கனவே பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் பூவெல்லாம் கேட்டுப் பார் என்ற படத்தில் ஜோதிகாவுடன் ஜோடி போட்டு சூர்யா நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

அந்தப் படம் போலவே பஞ்சுவின் இந்தப் புதிய படத்தையும் சூர்யா சூப்பர் ஹிட் ஆக்குவார் என்று நம்பலாம்.

Read more about: arunachalam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil