»   »  போன்டா, பஜ்ஜி பற்றி பேசியதற்கு சஸ்பெண்டா?, கேஸ் போட மாட்டேன்: விஷால்

போன்டா, பஜ்ஜி பற்றி பேசியதற்கு சஸ்பெண்டா?, கேஸ் போட மாட்டேன்: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் சும்மா போன்டா பஜ்ஜி பற்றி பேசியதை போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்துள்ளது வியப்பாக உள்ளது என விஷால் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக நடிகர் விஷால் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி அவர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடிதம்

கடிதம்

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான கடிதம் இன்னும் எனக்கு வரவில்லை. மீடியா நண்பர்கள் மூலமே செய்தியை தெரிந்து கொண்டேன்.

போன்டா, பஜ்ஜி

போன்டா, பஜ்ஜி

என்னை சஸ்பெண்ட் செய்து வெளியிடப்பட்ட கடிதத்தில் சீல் மட்டும் தான் உள்ளது, கையெழுத்து இல்லை. போன்டா, பஜ்ஜி பற்றி நான் சும்மா பேசியதை போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு சஸ்பெண்ட் செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது வியப்பாக உள்ளது.

விரோதம்

விரோதம்

தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள எந்த நிர்வாகிக்கும் எனக்கும் இடையே எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் சஸ்பெண்ட் கடிதம் வெளியிட்டதால் சிறிது எரிச்சல் அடைந்துள்ளேன்.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

நான் அவதூறு வழக்கு எதுவும் தொடரப் போவது இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன். அண்மையில் சிவகார்த்திகேயனுக்கு நடந்தது எனக்கும் நடந்துள்ளது. நான் அப்பொழுதே அது பற்றி பேசியிருந்தால், தற்போது நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

எதிரணி

எதிரணி

ஜனவரி மாதம் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடக்கும் என்ற அறிவிப்புக்காக காத்திருக்கிறேன். இந்த தேர்தலில் நிச்சயம் எதிரணி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை சஸ்பெண்ட் செய்தது இங்கு பிரச்சனை இல்லை.

English summary
Actor Vishal said he is surprised that producers council suspended him taking his speech about Bonda, Bajji seriously.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil