»   »  தமன்னா-சரத் நம் நாடு!

தமன்னா-சரத் நம் நாடு!

Subscribe to Oneindia Tamil

சரத்குமார், தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள நம்நாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.

அரசு, கம்பீரம் உள்ளிட்ட படங்களை சரத்குமாரை வைத்து இயக்கிய சுரேஷ் இயக்கத்தில், போக்கிரி படத்தைக் கொடுத்த கனகரத்னா மூவிஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்க உருவாகும் படம் நம்நாடு.

இப்படத்துக்கு முதலில் அழகிரி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் அதைப் பதிவு செய்வதில் சர்ச்சை ஏற்பட்டதால் அழகிரியை தூக்கிப் போட்டு விட்டு இப்போது நம் நாடு என்று மாற்றி விட்டனர்.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவின் வீட்டில்தான் பூஜை போட்டனர்.

இப்படம் மலையாலத்தில் வெளியான லயன் என்ற சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் ஆகும். நம்நாடு குறித்து சரத்குமார் கூறுகையில், எனக்கு பல வகையிலும் எம்.ஜி.ஆர்.தான் குரு. உண்மையான சூப்பர் ஸ்டார் அவர் மட்டும்தான்.

அவர் நடித்த படத்தின் டைட்டிலில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார்.

இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடி போடுகிறார் தமன்னா. இவருக்கு கோலிவுட்டில் கும்மன்னா என்றுதான் செல்லப் பெயராம். அந்த அளவுக்கு அட்ஜெஸ்டபிள் டைப்பாம் தமன்னா. யாருடைய மனசும் கோணாமல் நெகிழ்வாக நடந்து கொள்வாராம்.

இப்படத்திலும் தமன்னாவை வைத்து சாலக்குடி பக்கம் ஒரு குத்துப் பாட்டை எடுக்கும் திட்டத்தில் உள்ளார்களாம்.

நம்நாடு குறித்து இயக்குநர் சுரேஷ் கூறுகையில், இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சரத். இதை பெரிய அளவில் படமாக்குகிறோம். மிகப் பெரிய ஹிட் ஆகும். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார் என்றார்.

படத் தொடக்க விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil