»   »  தமிழ் சினிமாதான் எனக்கு உயிர்! - 'இறுதிச் சுற்று' மாதவன்

தமிழ் சினிமாதான் எனக்கு உயிர்! - 'இறுதிச் சுற்று' மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாதான் எனக்கு உயிர். அதை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று கூறினார் நடிகர் மாதவன்.

இறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அடுத்த சுற்றை ஆரம்பித்துள்ள மாதவன், அப்படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில், "இறுதிச்சுற்று படத்தில் நடித்தபோது பல தடங்கல்கள் வந்தன. ஒவ்வொரு தடவை படப்பிடிப்புக்கு சென்றபோதும் பிரச்சினைகளை சந்தித்தோம். கஷ்டங்களும் அவமானங்களும் ஏற்பட்டன.


Tamil Cinema is my breath, says Madhavan

ஒரு கட்டத்தில் இந்த படத்தை கைவிட்டு விட்டு வேறு படத்துக்கு போய்விடலாம் என்றும் யோசித்தோம்.


ஆனால் எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இந்த படத்தின் கதாபாத்திரம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறித் தடுத்தார்.


அதன்பிறகு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒரு வழியாக முடித்தோம். படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. பாராட்டுகளும் கிடைத்தன. ஏற்கனவே பட்ட அவமானங்கள் மறைந்து விட்டன.


பணத்துக்காக நடிக்கக் கூடாது. பாராட்டு கிடைப்பது மாதிரியான நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படம் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது.


தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று இங்கே பேசினார்கள். தமிழ் சினிமாதான் எனக்கு உயிர். நான் எங்கேயும் போக மாட்டேன்," என்றார்.

English summary
Actor Madhavan says that he never avoids Tamil Cinema and it is like his breath.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil