Don't Miss!
- News
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
- Finance
பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..!
- Sports
விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாபர் அசாம்.. தோனி, கோலி லிஸிட்டில் பாபர்.. ஐசிசியின் கவுரவம்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தமிழ் சினிமாவின் பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் 37வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனர்களை அறிமுகம் செய்து வருகிறார்
தமிழ் சினிமாவின் பிரின்ஸ் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் யாருடன் பிறந்தநாள் கொண்டாடிருக்கார் தெரியுமா ?

தனித்துவமான தொகுப்பாளராக
தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் இருந்த மிகப்பெரிய இடைவெளியை குறைத்து பலருக்கும் ஏணிப்படியாக மாற்றி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பல தடைகளைத் தாண்டி தொகுப்பாளராக எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன் அதில் தனது தனித்துவமான திறமையைக் காட்டி அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் மீமிக்ரி செய்து தனித்துவமான தொகுப்பாளராக வளர்ந்தார். பின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்

அவமானங்களை கண்டு துவண்டு விடாமல்
மெரினா திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. ஆனால் இவரை யாரும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. தொகுப்பாளராக இருந்து நடிகரான பின்பும் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்த சிவகார்த்திகேயன் அவமானங்களை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்து அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில் காமெடியனாக நடித்தார். அதை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி கொடி நாட்டினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டே இருந்த சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் காம்போ முதல்முறையாக இணைந்து இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வடிவேலுவின் காமெடியில் இடம்பெறும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயர் இந்த படத்திற்கு மிக பொருத்தமாக அமைந்தது. மேலும் வில்லேஜ் கதை களத்தில் அனைவருக்கும் பிடிக்கின்றவாறு வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

புது புது ஜானரில்
அப்போது முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா மோத்வானி உடன் ஜோடியாக மான்கராத்தே படத்தில் நடித்தபோது பலராலும் மீண்டும் விமர்சிக்கப்பட்டார். பாக்ஸிங்கை மையப்படுத்தி வெளியான மான் கராத்தே அப்போது சுமாரான வெற்றியைப் பெற்றது. அதை தொடர்ந்து ரெமோ, வேலைக்காரன்,சீமராஜா என ரசிகர்களுக்கு புது புது ஜானரில் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்
நான் வளர்ந்தால் மட்டும் போதாது தன்னுடன் இருந்தவர்களும் வளர வேண்டும் என நினைத்த சிவகார்த்திகேயன் தன்னுடன் கல்லூரியில் இருந்து பயணித்த அருண்ராஜ் காமராஜா என்பவரை கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார் . கனா சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தலான நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது
Recommended Video

பிறந்தநாள் கொண்டாட்டம்
வெற்றி தோல்வி என மாறி மாறி கண்டு வரும் சிவகார்த்திகேயன் இப்பொழுது அயலான், டான் மற்றும் அனுதீப் இயக்கத்தில் புதிய படமென தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் நேரடிப் படங்களில் நடிக்கிறார். இங்கே திறமையும் விடா முயற்சியும் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என சிவகார்த்திகேயன் இப்போதுள்ள பல இளைஞர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இப்பொழுது தமிழ் சினிமாவில் யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடுவதை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.