twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்!

    சினிமாவில் பல நடிகர்கள் தங்கள் படங்கள் மூலம் சுதந்திர இந்தியாவுக்கு முழங்கியுள்ளனர்.

    |

    சென்னை: சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களை நினைவு கூறலாம்.

    இன்று 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்தை போற்றும் வகையில் பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுதந்திர தாகத்தையும், அதன் வேட்கையையும் மக்களிடம் சினிமா ஏற்படுத்தியது.

    நடிகர்த் திலகம்

    நடிகர்த் திலகம்

    சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்ததோடு, அவர்களின் வாழ்க்கையை பாமர மக்களுக்கு கொண்டுசேர்த்தவர் நடிகர்த்திலகம் சிவாஜி கணேசன். கைகொடுத்த தெய்வம் திரைப்படத்தில் பாரதியார் வேடமேற்று சுதந்திர இந்தியாவின் ஒற்றுமை ஓங்கும் கருத்துகள் அடங்கிய சிந்துநதியின் மிசை பாடலில் நடித்திருப்பார்.

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    சுதந்திர இந்தியாவுக்கு குரல்கொடுத்து கயத்தாறில் தூக்குக் கயிறை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்த்ததில்லை. ஆனால் வீரம் தெறிக்கும் வசனத்தோடு கம்பீர நடைபோட்டு ஜாக்சன் துரைக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களின் வரி ஏய்ப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜிகணேசனை மறக்க முடியுமா?

    வ.உ.சிதம்பரனார்

    வ.உ.சிதம்பரனார்

    வ.உ.சி.என்று பள்ளிப் பாடபுத்தகத்தில் படித்த தலைமுறையினருக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரை சினிமாவின் மூலமாக உயிர்பெறச் செய்தவர் சிவாஜி கணேசன். ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதேசி கப்பல் விட்டதால் சிறையில் செக்கிழுத்த வ.உ.சியின் கதாப்பாத்திரமாகவே கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வாழ்ந்திருந்தார் சிவாஜி கணேசன்.

    சாகேத்ராம்

    சாகேத்ராம்

    ஹேராம் திரைப்படத்தில் சாகேத்ராமாக இவர் நடித்தது மிகவும் கவனத்தில்கொள்ளப்பட்டது. இந்தியன் திரைப்படத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக போராடுவார் சேனாதிபதி. இந்தியன் தாத்தாவாக அவர் செய்யும் நற்செயல்களைக் கண்டு இப்படி ஒருத்தர் இந்தியாவுக்கு தேவை என மக்கள் விரும்பும் அளவிற்கு பேசப்பட்டது. கற்பனை கதாபாத்திரங்களானாலும் சுதந்திர உணர்வை நுட்பமாக பேசின.

    ஆர்யா

    ஆர்யா

    மதராசப்பட்டினம் திரைப்படத்தின் பரிதி கதாப்பாத்திரம் கற்பனையாக இருந்தாலும், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையை காண்பித்தது. அதேபோல் நாடகங்கள் மூலம் எப்படி சுதந்திர முழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை காவிய தலைவன் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்தின் கதாபாத்திரத்தைக் கூறலாம்.

    English summary
    On the 72 independence day we look back our Tamil heroes who have featured freedom struggle characters in movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X