»   »  பேத்திக்குக் கல்யாணமானாலும் காலேஜ் பாய்தான்.. இப்பெல்லாம் அப்படி இல்லை பாஸ்!

பேத்திக்குக் கல்யாணமானாலும் காலேஜ் பாய்தான்.. இப்பெல்லாம் அப்படி இல்லை பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வாழ்க்கையில் பேத்திக்கு திருமணமாகி இருந்தாலும் கூட, சினிமாவில் தொடர்ந்து காலேஜ் பாயாகவே ஹீரோக்கள் நடித்து வந்த காலம் மலையேறிவிட்டது.

அதேபோல், பெரும்பாலும் கிளைமாக்ஸில் காதலனும், காதலியும் ஒன்று சேரும் காட்சிகளும் சமீபகாலமாக தமிழ்ப்படங்களில் காணாமல் போய்விட்டது.


பிரபலமான நடிகர்களும் கூட பொறுப்புள்ள தந்தையாக, தாயாக நடிப்பதையே விரும்புகின்றனர். சமீபத்தில் வெளியான, வெளியாக இருக்கும் படங்கள் சொல்லும் கருத்து அதுவே.


காவலன் விஜய்...

காவலன் விஜய்...

காவலன் படத்தில் சிறுவனுக்கு தந்தையாக நடித்திருந்தார் விஜய். படத்தின் துவக்கமே அவர் அப்பாக இருப்பதாகவே காட்டப்பட்டிருக்கும்.


என்னை அறிந்தால் அஜித்...

என்னை அறிந்தால் அஜித்...

அதேபோல், என்னை அறிந்தால் படத்தில் சிறுமியின் தந்தையாக நடித்திருப்பார் அஜித். திரிஷாவுக்கும் இதில் அம்மா வேடம்.


மாயா...

மாயா...

இளம் ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வரும் நடிகை நயன்தாரா, மாயா படத்தில் சிறு குழந்தையின் தாயாக நடித்திருந்தார். நீ எங்கே என் அன்பே படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்க மறுத்ததாகக் கூறப்பட்ட நயன், இப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.


பசங்க...

பசங்க...

இதேபோல், பசங்க 2 படத்தில் சூர்யாவும், அமலா பாலும் இரண்டு குழந்தைகளின் பெற்றோராக நடித்திருந்தனர். இதே படத்தில் நடிகை பிந்து மாதவியும் அம்மாவாக நடித்திருந்தார்.


சூர்யா...

சூர்யா...

ஏற்கனவே ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா - ஜோதிகா ஜோடி 7 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு பெற்றோராக நடித்திருந்தனர். மாசு என்கிற மாசிலாமணி படத்திலும் பெண் குழந்தைக்கு தந்தையாக சூர்யா நடித்திருந்தார்.


எஸ்-3...

எஸ்-3...

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக எஸ் 3யிலும், சூர்யா, அனுஷ்கா தம்பதிகளுக்கு குழந்தைகள் இருப்பது காட்ட இயக்குநர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.


பொறுப்பான அப்பாக்கள்...

பொறுப்பான அப்பாக்கள்...

இதுதவிர கார்த்தி சிறுத்தைப் படத்திலும், விக்ரம் தெய்வ திருமகன் படத்திலும், கமல் பாபநாசம் படத்திலும், இயக்குநர் ராம் தங்கமீன்கள் படத்திலும் பொறுப்பான அப்பாக்களாக நடித்து அப்ளாஸ் அள்ளினார்கள்.


தெறி...

தெறி...

இந்நிலையில் விஜய் தனது புதிய படமான தெறியில், பெண் குழந்தைக்கு அப்பா கேரக்டரில் நடிக்கிறார். இது ட்ரைலரைப் பார்க்கும் போது உறுதியாகி இருக்கிறது.


போலி பிம்பம்...

போலி பிம்பம்...

நிஜவாழ்க்கையில் வயதானாலும், திரையில் வயதைக் குறைத்துக் காட்டி போலியான பிம்பத்தை ரசிகர்கள் மனதில் விதைக்காமல், கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக மட்டுமல்ல அப்பா, அம்மாவாகவும் நடிக்கலாம் என்ற மனப்பக்குவர் நடிகர், நடிகைகள் மத்தியில் உருவாகி இருப்பது பாராட்டுக்குரியதே.


விழிப்புணர்வு...

விழிப்புணர்வு...

அதிலும் குறிப்பாக பெரும்பாலான படங்களில் பெண் குழந்தைகளுக்கு பெற்றோராகவே இவர்கள் நடிக்கின்றனர். இது பெண் சிசுக் கொலைக்கு எதிரான மறைமுகமான விழிப்புணர்வாக எடுத்துக் கொள்ளலாம்.


English summary
In recent tamil films show that heroes are interested to play father role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil